Tuesday, September 19th, 2017

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் நீரில் மிதக்கிறது

Published on October 30, 2012-12:59 pm   ·   No Comments

‘சண்டி’ சூறாவளி அமெரிக்காவை தாக்கியுள்ளதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. முக்கியமாக எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் நியூயோர்க் நகரம் நீரில் மிதக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்நகரம் இருளில் மூழ்கியுள்ளது.

கரிபியன் கடலில் தோன்றிய, ‘சண்டி’ சூறாவளியினால் அமெரிக்காவின் நியூயார்க், வொஷிங்டன், நியூஜெர்சி, மன்ஹட்டன் உள்ளிட்ட 13 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தனது வரலாற்றின் மிகப்பெரிய சூறாவளியைச் சந்தித்துள்ளது.

இந்த சூறாவளி காரணமாக 60 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளியால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நியூயோர்க் நகரம், சினிமாப் படமொன்றை ஒளிப்பதிவு செய்வதற்காக இயற்கை சீரழிவுகள் அடங்கிய காட்சிகளை காட்சியமைத்திருப்பது போல தென்படுவதாக வெளிநாட்டு செய்திகள் விபரித்துள்ளன.

‘சண்டி’ சூறாவளி, அமெரிக்காவை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நியூயோர்க் நகரிலிருந்து சுமார் 3 இலட்சத்து 70ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சூறாவளி, அமெரிக்காவின் வடகிழக்கு கரையோரத்தைச் சேர்ந்த நகரங்களான வொஷிங்டன், நியூயோர்க், பொஸ்டன் ஆகிய பெரிய நகரங்களையே நாசமாகிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

6.5 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 விமான சேவைகள் ரத்து. பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் மூடப்பட்டன. 2001 தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக பங்குச்சந்தை மூடப்பட்டது. அணுமின்நிலையம் ஆபத்துக்குள்ளாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...