Wednesday, January 17th, 2018

அமெரிக்காவில் சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது- மீண்டும் வெற்றி பெற்ற ஒபாமா

Published on November 7, 2012-10:26 am   ·   No Comments

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். 270வாக்குகளே வெற்றி பெறுவதற்கு போதுமாக இருந்த போதிலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 303வாக்குகளை பராக் ஒபாமா பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னிக்கு 203வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து இருமுறை அதிபரானது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை. அந்த வகையில் மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையான புகழை ஒபாமா பெற்றுவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
ஆனால் ஒபாமாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதால்இ அவர் வெள்ளை மாளிகையில் அடுத்த நான்காண்டுகள் அமர்வதை அனைத்து தரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன.

அதிபர் ஒபாமாவும்இ ‘இன்னும் நான்காண்டுகள் வெள்ளை மாளிகை வாசம்.. நன்றி வாக்காளர்களே’ என செய்தி விடுத்துள்ளார். தனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு டுவிட்டர் மூலம் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில்இ அரசுத்தலைவர் ஒபாமாவும்  குடியரசு கட்சி சார்பில்  மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில்  பிரதிநிதிகள் சபைக்கு  435 பேரும் செனட் சபைக்கு 100 பேரும் வொஷிங்டன் சார்பில் மூன்று பேரும் என  538 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.

ஒபாமா வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களில் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலக தலைவர்களும் ஒபாமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலக நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமாவுக்கே அதிக ஆதரவு கிடைத்திருந்தது. சீனாவில் மட்டும் மிட் ரோம்னிக்கு ஆதரவு கிடைத்திருந்தது.

இதேவேளை அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது என அரசுத்தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பராக் ஒபாமா தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் சிக்காகோ நகரில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வேலையற்று இருக்கும் சூழலை ஒழித்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்று படுவோம் என அவர் தெரிவித்தார். அமெரிக்க குழந்தைகள் கடன் சுமைகள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என்றும் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசுத்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா அமெரிக்காவை வெற்றிகரமாக வழிநடத்தி செல்வார் என அவரை எதிர்த்து போட்டியிட்ட மிட் ரோம்னி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது தெரிவித்துள்ளார். ஒபாமாவுக்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...