Monday, November 20th, 2017

இஸ்ரேலின் தாக்குதலில் பலஸ்தீன ஹமாஸ் இயக்க தலைமையகம் முற்றாக சேதம்!

Published on November 17, 2012-10:36 am   ·   No Comments

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதலில் ஹமாஸ் இயக்க தலைமையக கட்டிடமும் சிதைந்து போனது.  இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேலும் இரவு பகல் பாராமல் இடைவிடாமல் வான்வழித் தாக்குதலை காசா பகுதி மீது நடத்தி வருகிறது.

இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் தங்களது மத்திய தலைமையகமும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.  இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளரும் இதை உறுதிப்படுத்தும் வகையில், ஹமாஸ் இயக்க பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் தலைமையகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதலில் இதுவரை 30 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 300 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஹமாஸ் இயக்கத் தாக்குதல் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 16 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...