Thursday, October 19th, 2017

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம்

Published on December 6, 2012-11:39 am   ·   No Comments

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது மேர்சி தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த முற்றுகையை முறியடிப்பதற்கு இராணுவத்தினர் மோற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை காயமடைந்துள்ளனர்

எகிப்திய ஜனாதிபதி முகமது மேர்சி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதிகளவிலான அடக்குமுறைகளை கையாள்வதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தலைநகர் கெய்ரோவில் போராட்டம் நடத்தினர்.

தாரீர் சதுக்கம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து இரவு பகலாக போராட்டம் நடத்திவந்த மகக்ள் கடந்த இரவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த போது மாளிகைக்குள் இருந்து ஜனாதிபதி முகம்மது மேர்சி பின்வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முற்றுகையை முறியடிப்பதற்கு பாதுகாப்பு படையினர் மோற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை காயமடைந்துள்ளனர் .  எகிப்த்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து இடம்பெற்ற தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி முகமது மேர்சி தன்னிச்சையாக அதிகாரங்களை தன்வசப்படுத்திக்கொண்டு பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் வழிமுறைகளையே பின்பற்றுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விரைவில் புதிய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வுள்ளதாகவும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கு பகிhந்தளிக்கப்படும் என்று எகிப்திய அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...