Monday, September 25th, 2017

இலங்கை அணி படுதோல்வி

Published on December 28, 2012-11:43 am   ·   No Comments

ஓஸ்ரேலிய அணியுடனான இரண்டாவது ரெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.  இன்று தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 156 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழக்க, ஒஸ்ரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை மாத்திரம் இழந்தது. எனினும் உபாதைக்கு உள்ளான இலங்கை அணி வீரர்கள் மூவர் துடுப்பெடுத்தாட களம்வரவில்லை என்பதால் அவர்களும் ஆட்டமிழந்தவர்களாக கருதப்பட்டனர்.
குமார சங்கக்கார 27 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, காயம் காரணமாக வெளியேறினார். அவரால் மீண்டும் துடுப்பெடுத்தாட வரமுடியவில்லை.

அத்துடன் சானக வெலகெதர மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகியோர் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கே நுழையவில்லை. இவர்கள் இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.
போட்டியின் நாயகனாக மிச்செல் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட ரெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் அவுஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...