Saturday, November 18th, 2017

பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் இன்று காலமானார்!

Published on December 29, 2012-10:55 am   ·   No Comments

பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் இன்று சனிக்கிழமை காலமானார்;. அவருக்கு வயது 66.

இங்கிலாந்து அணியின் சார்பாக 58 டெஸ்ட் போட்டிகளிலும், 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றிய டொனி கிரெய்க், இங்கிலாந்தில் தோன்றிய மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

58 டெஸ்ட் போட்டிகளில் 40.43 என்ற சராசரியில் 8 சதங்கள், 20 அரைச்சதங்கள் உட்பட 3599 ஓட்டங்களைப் பெற்ற அவர், 32.20 என்ற சராசரியில் 141 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

தான் களத்தில் விளையாடிய 1972-77 காலத்தில் எதிரி அணிகளின் வீரர்களிடமும் நெருக்கமான நட்பு பாராட்டியவர் டோனி. அனைத்து நாட்டு அணிகளிலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் உண்டு. மிகச் சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராகத் திகழ்ந்த அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியா –

பாகிஸ்தான் அணிகள் துபாயில் விளையாடியபோதுதான் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் நோய் முற்றிய நிலையில் இருந்தது. தனது உடல்நிலை மோசமாகிவிட்டது தனக்கே தெரிகிறது என்றும் மரணத்தோடு போட்டியிட முடியாது. மருத்துவர்கள் செய்வதைச் செய்யட்டும் என்றுவிட்டு விட்டுவிட்டதாக அவர்ஒரு முறை கூறியிருந்தார்.

தொடர்ச்சியாக புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இன்று அவரது வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனழிக்காது மரணமடைந்தார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...