Monday, September 25th, 2017

2012ஆம் ஆண்டுக்கான தங்கப்பந்து விருதை அர்ஜென்டினாவின் லியனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்!

Published on January 8, 2013-9:52 am   ·   No Comments

2012 ஆம் ஆண்டுக்கான பீபாவின் (FIFA) சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினாவின் முன்கள வீரர் லியனல் மெஸ்ஸி தெரிவுசெய்யப்பட்டு அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டுள்ளது.   இந்த விருதை நான்காவது முறையாக பெற்று மெஸ்சி சாதனைப் படைத்துள்ளார்.

சுவிஸ் சூரிச் நகரில் நேற்றிரவு வண்ணமயமான விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து சம்மேளமான சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கால்பந்து அணிகளின் தலைவர்கள், பயிற்சியாளர்கள் பிபாவால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் வாக்களித்து விருதுக்குரிய வீரரை தேர்வு செய்யப்படுகின்றனர்.

நேற்று சூரிச் நகரில் நடந்த வாக்கெடுப்பில் 41.6 வீதமான வாக்குகளைப் பெற்று லயனல் மெஸ்சி 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் என்ற விருதை தொடர்ச்சியாக நான்காவது முறையாக தட்டிச் சென்றார்.  இதற்கு முன்னர் 2009, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் இந்த விருதை லயனல் மெஸ்சியே பெற்றிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

அதுமட்டுமன்றி கடந்தாண்டு மாத்திரம் 91 கோல்களை அடித்து 25 வயதான லையனல் மெஸ்சி உலக சாதனை படைத்துள்ளார்.  இதில் பார்சிலோனா அணிக்காக 79 கோல்களையும், ஆர்ஜன்டீன அணிக்காக 12 கோல்களையும் கடந்தாண்டு மாத்திரம் அடித்துள்ளார்.

40 வருடங்களின் பின்னர் இந்த சாதனை புதிப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் அதிக கோல்களை அடித்த சாதனை இதற்கு முன்னர் ஜெர்மனி வீரர் முல்லருக்குச் சொந்தமாக இருந்தது.   முல்லர் 1972 ஆம் ஆண்டில் 85 கோல்களை அடித்ததே சாதனையாக பதியப்பட்டிருந்தது.

2012ஆம் ஆண்டுக்கான விருதிற்காக 23 வீரர்களின் பெயர்களை உலக கால்பந்து சம்மேளனம் பரிந்துரை செய்திருந்தது. எனினும் அர்ஜென்டினா வீரர் லியனல் மெஸ்ஸி, போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயின் அணியின் நடுகள ஆட்டக்காரர் அன்ட்ரஸ் இனியஸ்டா ஆகிய 3 பேர் இறுதிப் பட்டியலில் தெரிவாகியிருந்தனர்.

இது தவிர சிறந்த பயிற்றுவிப்பாளர், சிறந்த பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கணை ஆகியோருக்கான விருதுகளும் வழங்கப்பட்டது

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...