Tuesday, February 20th, 2018

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர்

Published on April 16, 2013-1:12 pm   ·   No Comments

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.  போஸ்ரன் நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டி நிறைவின்;போதே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம்’ என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தேவையான பாதுகாப்புக்கள் அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் சவுதி அரேபியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காமயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்நபர் சவுதி அரேபியாவிலிருந்து மாணவர் விசாவில் வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை போஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நியூயோர்க், வொஷிங்டன், சிகாகோ, லோஸ் ஏஞ்சலீஸ் நகரங்களில் உச்சகட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையை சுற்றிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. போஸ்டன் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு காரணமானவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், இது தீவிரவாத தாக்குதல் தான் என்று செனட் புலனாய்வு சபை தெரிவித்துள்ளது.
2001-ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பிற்கு ஐ.நா.,பொதுச்செயலாளர் பான் கீ மூன், உட்பட உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...