Tuesday, November 21st, 2017

சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி முதன் முறை கிண்ணம் வென்றது மும்பை இந்தியன்ஸ்

Published on May 27, 2013-7:53 am   ·   No Comments

மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி 6-வது ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.  ஐ.பி.எல். சீசன் 6-ன் இறுதிப்போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மும்பை அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தார்.

தொடக்க வீரர்களாக டிவைன் சுமித்- டரே களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரே மும்பை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு டரேவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை மோர்கல் வீசினார். முதல் பந்தில் டரே கிளீன்போல்டாகி வெளியேறினார் அடுத்து வந்த தலைவர் ரோகித் சர்மா 2 ஓட்டங்கள் எடுத்த திருப்தியில் மோர்னே பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களை எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். ராயுடு 36 பந்தில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் பொல்லார்டு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் கடைசி ஓவரின் 5-வது மற்றும் 6-லது பந்தில் இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை எடுத்தது.

சென்னை அணி சார்பில் பிராவோ சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மலிங்கா வீசினார். முதல் ஓவரே சென்னை அணிக்கு பேரிடியாக அமைந்தது. ஹசி 4-வது பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த வந்த ரெய்னா முதல் பந்திலேயே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை ஜான்சன் வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தில் பத்ரிநாத் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டக் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி 1.4 ஓவரில் 3 ஓட்டங்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டை இழந்தது.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க சென்னை அணியின் தோல்வி உறுதியானது. தலைவர் டோனி மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை எடுத்தார். சென்னையில் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களை எடுத்தது. இதனால் மும்பை அணி 23 ஓட்டங்களில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...