Monday, August 21st, 2017

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு.

Published on August 31, 2013-9:03 am   ·   No Comments

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார்

மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில், மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, மைக்கேல் ஏஞ்சல் பால்கன். இதே நீதிமன்றத்தில் பணிபுரியும் மற்றொரு நீதிபதி, ரூபன் ஜாசோ. முக்கிய வழக்கு ஒன்றை, இந்த இரு நீதிபதிகளும், நேற்று விசாரித்தனர். விசாரணை நேரத்தில், ரூபன் ஜாசோவின் செய்கைகள், மைக்கேலுக்கு பிடிக்கவில்லை.

முதலில் ஜாசோவை, “முட்டாள்’ என, திட்டினார். அதை தொடர்ந்து, ஜாசோ மீது பாய்ந்து, அவரை நைய புடைத்தார் மைக்கேல். நீதிமன்றத்தில், அனைவரது முன்னிலையில், இந்த சம்பவம் நடந்ததால், அங்கு பரபரப்பு நிலவியது. பின் சுதாரித்து கொண்ட மைக்கேல், தன்னுடைய செய்கைக்காக, நீதிமன்றத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார். முக்கிய நீதிமன்றத்தில், மூத்த நீதிபதி மைக்கேல், அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக, அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...