Tuesday, September 19th, 2017

தீக்குளிக்கும் தம்பிராசாவும் வீடியோ எடுக்க துடிக்கும் ஊடகவியலாளர்களும்

Published on September 30, 2013-6:50 am   ·   No Comments

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரிக்கு வடமாகாணசபையில் போனஸ் ஆசனம் வழங்கவில்லை என்றால் தான் தீக்குளித்து இறப்பேன், அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இறப்பேன் என வடமாகாணசபைக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட தம்பி என்று அழைக்கும் தம்பிராசா அண்மையில் தெரிவித்திருந்தார்.

தற்போது போனஸ் ஆசனம் யாருக்கு வழங்குவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படவில்லை, சுழற்சி முறையிலும் ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனம் கிடையாது என்பது உறுதியாகி விட்டது.

அப்படியானால் தம்பிராசா தீக்குளிப்பது உறுதியாகி விட்டதாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

தம்பிராசாவிடம் தொடர்பு கொண்ட சில ஊடகவியலாளர்கள் அண்ணை எப்ப தீக்குளிக்க போறியள். எந்த இடத்தில தீக்குளிக்க போறியள், தீக்குளிக்க இடத்தையும் நேரத்தையும் நேரகாலத்தோட சொன்னால் நாங்கள் வந்து வீடியோ எடுக்கலாம். அதை எங்களட்டை இரகசியமாக சொல்லுங்கோ, நாங்கள் பொலிஸட்டை சொல்ல மாட்டாம். பொலிசட்டை சொன்னால் நீங்கள் தீக்குளிக்கிறதை தடுத்து போடுவாங்கள்.

எப்ப அண்ணை தீக்குளிக்க போறீங்கள் என ஊடகவியலாளர்கள் தம்பியிடம் துளைத்தெடுத்து வருகிறார்களாம்.

பாவம் தம்பி ஆனந்தசங்கரியை நம்பி தீக்குளிப்பன் எண்டு சொல்லி இப்ப சங்கடத்தில் மாட்டிக்கொண்டு விட்டாராம்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...