Friday, September 22nd, 2017

தாய்லாந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்தை செய்யுமாறு கோரிக்கை

Published on December 2, 2013-7:33 am   ·   No Comments

தாய்லாந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திவருபவர்கள் நாட்டில் உள்ள அரச பொது ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தை செய்யுமாறு கோரியுள்ளனர்.

தாய்லாந்தில் கடந்த 9நாட்களாக தலைமை அமைச்சருக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் புரட்சி வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 45 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசியல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்ட மசோதாவை, சமீபத்தில் தலைமை அமைச்சர் சினவத்ரா கொண்டு வந்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று நாட்டை விட்டு வெளியேறிய தனது சகோதரரை காப்பாற்றவே, இந்த சட்டத்தை கொண்டு வருவதாக கூறி, எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பிரதமர் பதவி விலகக் கோரியும் ஆயிரக்கணக்கானோர், கடந்த மாதம் 25ம் திகதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் தாய் தொலைக்காட்சி நிலையத்தை கையகப்படுத்தியுள்ளனர். மற்றொரு குழுவினர், உள்துறை அமைச்சகத்தை முற்றுகையிட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால், அந்நாட்டில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...