Wednesday, January 17th, 2018

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழக தமிழர்கள் கலவரம்- 18பேர் காயம் ( Video & Photos)

Published on December 9, 2013-9:59 am   ·   No Comments

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களில் காவல்துறை உத்தியோகத்தர்கள் 10பேர் உட்பட 18பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் வாகனம் உட்பட 5வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மோதலையடுத்து 27ற்கும் மேற்பட்ட தமிழக தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகளில் சுமார் 400பேர் ஈடுபட்டதாகவும் இவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  சிங்கப்பூரில் வேலைக்காக சென்றிருக்கும் தமிழக தமிழர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லிட்டில் இந்தியா தேக்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கமாகும்.

ஆயிரக்கணக்காக கூடும் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தேக்கா பகுதி வீதி ஓரங்களில் இருந்து மது அருந்தி விட்டு குப்பைகளையும் வெற்றுப்போத்தல்களையும் வீசிவிட்டு செல்வது வழக்கமாகும். அழகான சிங்கப்பூர் நகரை இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் அசுத்தப்படுத்தி விட்டு செல்வது வழக்கமாகும்.  நேற்றும் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையும் தேக்காவில் அதிகமானோர் கூடினார்கள்.

அந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறியபோது அதில் இருந்த பெண் சாரதி அந்த பயணியை தள்ளிவிட்டதாகவும் அதனால் கீழே விழுந்த அந்த தமிழ் பயணி அதே இடத்தில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு நின்ற தமிழர்கள் அந்த பேருந்தை உடைத்ததுடன் அங்கு வந்த சிங்கப்பூர் காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அங்கு நின்ற இரண்டு காவல்துறை வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் அங்கு வந்த நோயாளர்காவு வண்டி ஒன்றும் உடைக்கப்பட்டது.  இதனையடுத்து காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இதுவரை  27க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை என கூறப்படுகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சொந்த நாடுகளுக்கு சென்றுவிடாது தடுப்பதற்காக விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...