Tuesday, February 20th, 2018

ஏற்றம் தயாரிப்பு மூலிகைத்தேனீரும், மூலிகைகளின் மருத்துவ குணங்களும்

Published on December 16, 2013-1:41 pm   ·   No Comments

தயாரிப்பு விவரம்:-

இது உயர் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக்கொண்ட ஏற்றம் மூலிகைத்தேனீர் திரு பரமேஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்டது  இது வெறும் தொழில்துறை உற்பத்தியாக அல்லாது ஆரோக்கியத்தை முன்வைத்தது அனைவரும் பருகும் வகையில் இந்த ஏற்றம் மூலிகைத்தேனீர் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்றம் மூலிகைத்தேனீர்

ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் (பாரம்பரிய இந்திய சிகிச்சைமுறை கலையாகும் ) கொண்டு செய்த ஏற்றம் தயாரிப்பு மூலிகைத்தேனீர் குளிர்மையாகவும் மற்றும் சூடாகவும் இருவேறு சுவைகளிலும் பருகி அனுபவிக்க முடியும்
உள்ளடக்கம்

கறுப்பு தேயிலை,

தேயிலை குறிப்பாக இதயத்துக்கு நல்லது. நீண்ட கால நோய்களான இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு ஆகியவை உடல் எரிச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும் காரணிகளுடன் தொடர்புடையவை. தேநீரில் உள்ள ப்ளேவனாய்டு அதற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. ரத்தத்தில் சீனி சத்து மற்றும் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம்

ரோஜாபழம் ( வைட்டமின் நிறைந்த , குறிப்பாக வைட்டமின் சி )

கறுவா (இலவங்க்கப்பட்டை)

இலவங்கப்பட்டை நீரிழிவு நோய்க்கு நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் இலவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது. வாய் துர்நாற்றம் நீங்க வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும். செரிமான சக்தியைத் தூண்ட எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும். இருமல், இரைப்பு சளித்தொல் இருமல் இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும். விஷக்கடிக்கு சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும். வயிற்றுக் கடுப்பு நீங்க வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும்.
இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை காயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து. தாது விருத்திக்கு தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கறுவாப்பட்டை முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.
கரும்புக் சீனி பிரத்தியேகமாக இனிப்புடன்.

இஞ்ச்சி

என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். காலையில் எழுந்தவுடன் இஞ்சி தேனீர் குடிப்பது நல்லது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இஞ்சி தேனீர் குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி தேனீர் ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். நெஞ்செரிச்சல் அல்லது
அஜீரணம் சரியாக, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது.

குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது, இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமாவை போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை தீரும்.

மிளகு

இந்திய உணவுகளில் கூடுதல் சுவையை உண்டாக்கவும் கறுப்பு மிளகைப் பயன்படுத்துகிறோம். ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம்.
மன அழுத்தம் கருப்பு மிளகில் உள்ள பப்பெரைன் மூளையில் உள்ள அறிவுத்திறன் அமைப்பை அதிகரிக்க செய்து, மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஜெர்னல் ஆப் ஃபுட் அண்ட் கெமிக்கல் டாக்சிகாலாஜி கூறியுள்ளது. அதிலும் சீரான முறையில் மிளகை உட்கொண்டால், மூளை செயல்பாடு ஒழுங்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமெனில் சாலட்டிலும் சேர்த்துக் கொள்ளலாம். மிளகை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொண்டால், ஆற்றல் அதிகரித்து மன அழுத்தம் நீங்கும்.

ஊட்டச்சத்து உடலில் உள்ள மருந்து இருப்பை அதிகரிக்க கறுப்பு மிளகின் குணங்கள் உதவுகிறது. அப்படியென்றால் உணவில் இருந்து வரும் ஊட்டச்சத்துக்களை உடலில் சரியாக பயணிக்க செய்து ஈர்த்துக் கொள்ள உதவும். இந்த குணம் மருந்து சரியாக வேலை செய்யவும் துணை நிற்கும்.

பசியின்மை கறுப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தி சுவை அரும்புகளை ஊக்குவிப்பதை அறிவோம். இந்த குணத்தால் பசியின்மையால் தவிப்பவர்களுக்கு மிளகு ஒரு இயற்கை மருந்தாக விளங்குகிறது. உணவில் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொண்டால் போதும். அது பசியின்மை பிரச்சனையை நீக்கும்.

சளியை நீக்கும் கறுப்பு மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளதால், சளி மற்றும் இருமலை குணப்படுத்த அது பெரிதும் உதவும். கதகதப்புடன் காரசாரமாக இருப்பதால், சளியை நீக்கி அடைபட்டிருக்கும் மூக்கிற்கு நிவாரணியாக விளங்கும். அதற்கு அரைத்த மிளகை ரசம் அல்லது சூப்பில் சேர்த்து குடியுங்கள். இது உடனடியாக சளியை நீக்கி சுலபமாக மூச்சு விட செய்யும்.

பொடுகில் இருந்து காக்கும் பொடுகை நீக்கும் ஷாம்புக்களை எல்லாம் தூக்கி எறியுங்கள். அதற்கு பதில் மிளகை பயன்படுத்துங்கள். அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் பொடுகை நீக்க உதவும். அதற்கு அரைத்த மிளகை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு கப் தயிரில் கலக்கவும். அதனை நன்றாக கலந்து தலை சருமத்தில் தடவவும். அரை மணி நேரத்திற்கு பின்பு தலை முடியை அலசுங்கள். இந்த நேரத்தில் ஷாம்பு பயன்படுத்தாதீர்கள். அடுத்த நாள் தலையை ஷாம்பு போட்டு கழுவிக் கொள்ளுங்கள்.

மிளகை அதிகமாக பயன்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அது தலையை காயப்படுத்திவிடும். சருமத்தை தூய்மையாக்கும் உடலில் இருந்து வியர்வை மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேற கறுப்பு மிளகு உதவுவதோடு நிற்காமல், அழுக்கு நீக்கியாகவும் உதவுகிறது. மிளகை அரைத்து முகத்திற்கு தடவும். ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும். மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

வாயு பிரச்சனை நீங்கும் வாயு உருவாகுவதை தடுக்கும் பொருளான கார்மிநேடிவ் கறுப்பு மிளகில் உள்ளதால் வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். எனவே உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகை சேர்த்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

உடல் எடை குறைய உதவும் கறுப்பு மிளகு உணவை செரிக்க (ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல்) வைப்பதிலும் பெரிதும் உதவும். மேலும் அதன் வெளிப்புறத்தில் உள்ள ஆற்றல் மிக்க பைட்டோ-நியூட்ரியன்ட் ஊக்கி கொழுப்பு அணுக்களை உடைத்தெறியும். இது வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க உதவும். இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுவதால், உடலில் இருந்து நச்சுப் பொருட்களும் வெளியேறும். இவையனைத்தும் கூட்டாக சேர்ந்து, உடல் எடை குறைய துணை புரியும். ஆகுவே உடல் எடை குறைய தினமும் உண்ணும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி கொள்ளுங்கள். அதிகப்படியாக அதை சேர்க்கக்கூடாது. அது வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
செரிமானத்திற்கு உதவும் கறுப்பு மிளகில் உள்ள பப்பெரைன் செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரியும்.

வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகமாக சுரக்க தூண்டுகோலாக விளங்குகிறது கறுப்பு மிளகு. இந்த அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவுகள் செரிமானமாக உதவும். இந்த உணவு வகைகள் சரிவர செரிமானமாகாமல் போனால் வயிற்றுப் பொருமல், செரிமானமின்மை, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும். அதிகப்படியாக உற்பத்தியாகும் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கும். செரிமானத்தை சீராக்க, சமைக்கும் போது உணவில் ஒரு டீஸ்பூன் கறுப்பு மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள். அது சுவையை கூட்டுவதுடன், வயிற்றையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

புற்றுநோயை தடுக்கும் மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கறுப்பு மிளகு உதவுகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறியுள்ளது. மேலும் இதனை மஞ்சளுடன் கலக்கும் போது, அதன் புற்று எதிர்ப்பு குணங்கள் இன்னமும் அதிகரிக்கும். பப்பெரைன்னை தவிர கறுப்பு மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ப்ளேவோனாய்டுகள், கரோடீன்கள் மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது.

இவைகள் தீமையை விளைவிக்கும் இயக்க உறுப்புகளை நீக்கி, உடலை புற்றுநோய் மற்றும் இதர நோய்களில் இருந்து பாதுகாக்கும். சரும புற்று மற்றும் குடல் புற்று வளர்வதை தடுப்பதிலும் கூட இது பெரிதும் உதவுகிறது என்று வேறு சில ஆய்வுகள் கூறுகிறது. எனவே உணவுகளில் தினமும் ஒரு டீஸ்பூன் மிளகு பொடியை சேர்த்திடுங்கள்.

சமைக்கும் போது அதனை உணவில் சேர்ப்பதை விட, அதை அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.

ஏலக்காய்

வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏலக்காய் சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று. அசைவ உணவில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனிதான் செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை. நாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன. நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது.
பலவீனம் நீக்கும் ஏலக்காய் ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன:

இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்குகட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.மன அழுத்தத்திற்கு ஏலக்காய் டீ மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், ‘ஏலக்காய் தேனீர் குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். தேயிலை தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து தேனீர் தயாரிக்கும் போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த தேனீரை குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா வாயில் போட்டு மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. தலைசுற்றல், மயக்கம் போக்கும் வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.

வாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள் , கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.
நட்சத்திர சோம்பு

அஜீரணக் கேளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூலநோயின் பாதிப்பிலிருந்து விடுபட சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி உண்டு. சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நரம்புகள் பலப்பட நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.

கராம்பு (உடலில் இருக்கும் 7சக்ரரக்களை ( உடல் சக்தி மையங்கள் ) நேரடியாக செயல்பட வைக்கும்.)

சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது. இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

பல்வலி போக்கும்

உடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும், மகப்போறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி, மற்றும் சொத்தைப்பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.. கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். உடல்வலி நீங்கும்
கொத்தமல்லி,

‘கொத்தமல்லிக்கு எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு.’ என்ற கருத்துப்பட மதிப்பிக்குரிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் நடந்த குடும்ப வைத்தியர்களுக்கான கருத்தரங்கில் பேச்சு வாக்கில் சொன்னார். அவரது பேச்சின் பொருள் வேறானதால் இதற்கான மருத்துவ ஆய்வுத் தகவல்களை தரவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

இதற்கு மருத்துவ ஆய்வு ஏன்? அனுபவ ரீதியாக நாங்கள் எத்தனை தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.’ என நீங்கள் சொன்னால் அதனோடு ஒத்துப் போகவும் நான் தயாராகவே உள்ளேன். மேற் கூறிய கருத்தரங்கிற்குப் பின்னர் தடிமன், உடல் அலுப்பாக இருந்தபோது பரசிட்டமோல் போடுவதற்குப் பதிலாக மல்லிக் குடிநீர் குடித்துப் பார்த்தேன். பல மணிநேரங்களுக்குச் சுகமாக இருந்ததை அனுபவத்தில் காண முடிந்தது.  சிறு வயதில் அம்மா அவித்துத் தந்த குடிநீரை பல தடவைகள் குடித்திருந்தபோதும் அதன் பலன்கள் பற்றி இப்பொழுது தெளிவாகச் சொல்வதற்கு முடியவில்லை.

இருந்போதும் இன்றும் தடிமன் காய்ச்சலுக்காக மருந்துவரிடம் செல்லும் பலர் அதற்கு முன்னர் மல்லி சேர்ந்த குடிநீர் உபயோகித்ததாகச் சொல்வதுண்டு. இதன் அர்த்தம் என்ன? பலருக்கும் முதல் உதவியாக, கை மருந்தாக அது உதவுகிறது என்பதே. அதற்கு குணமடையாவிட்டால் நவீன மருத்துத் துறை சார்ந்தவர்களை நாடுகிறார்கள். இணையத்தில் தேடியபோது தடிமன் காய்ச்சல், மூட்டு வலிகள், உணவு செமிபாடின்மை, பசியின்மை, ஒவ்வாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க கொத்தமல்லி உதவும் எனப் பலரும் எழுதியிருந்தார்கள். இவை பெரும்பாலும் அனுபவக் குறிப்புகள். சில வீட்டு வைத்திய முறைகள்.  ஆயினும் இவை எதுவுமே விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இல்லை என்பது ஏமாற்றத்தை அளித்தது.

வாசனைத் ஊட்டிகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து பார்த்தால் கொத்தமல்லி பற்றிய பதிவு மிகவும் தொன்மையானது எனத் தெரியவரும். பைபிளில் இது பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உண்டு. நாம் அவற்றின் விதைகளையும், தளிர்களையும் சமையலில் பயன்படுத்துகிறோம். முன்னைய காலங்களில் பல்லி மிட்டாய்களின் உள்ளே சீரகம், மல்லி ஆகியவற்றை வைத்திருந்தமை சிலருக்கு ஞாபகத்தில் வரலாம். ஆயினும் கொத்தமல்லி என்பது விதை அல்ல. உண்மையில் அது காய்ந்த பழம் என்பதையும் குறிப்பட வேண்டும். தாய்லாந்தில் அதன் தளிரும், வேரும் சேரந்த பேஸ்ட் உணவுத் தயாரிப்பில் முக்கியமானதாம். கொத்தமல்லி மிகவும் பாதுகாப்பான உணவு என்று நம்பப்பட்ட போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது மருத்துவ ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கொத்தமல்லி மாத்திரமின்றி அதைப்போன்ற அபியேசியே இனத்தைச் சார்ந்த வேறு பல கறிச்சரக்கு மூலிகைகளுக்கும் இவ்வாறு ஒவ்வாமை ஏற்படலாம் என அறியப்பட்டுள்ளது.  இவ்வாறு கூறியதும் கொத்தமல்லி அலர்ஜிப் பண்டம் அதைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிடாதீர்கள். உணவு அலர்ஜி என்பது குறைவாகவே மக்களைப் பீடிக்கிறது. அவ்வாறான உணவு அலர்ஜிகளிலும் கறிச்சரக்கானது வெறும் 20சதவிகிதம் மட்டுமே. கறிச்சரக்கில் சேர்க்கப்படும் பல்வேறு பொருட்களில் மல்லியும் ஒன்றுதான். எனவே மல்லியை அலர்ஜி என ஒதுக்க வேண்டியதில்லை.

ஆயினும் உணவு அலர்ஜி உள்ளவர்கள் தமது ஒவ்வாமைக்கான காரணங்களாக நண்டு, இறால், கணவாய், அன்னாசி, தக்காளி எனப் பட்டியல் இடும்போது கறிச்சரக்குக்காக இருக்குமா என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.
மூலிகைத்தேனீர் கதை

ஆயுர்வேத குளிர்ந்த தேநீர் யோசனை யுஅடியயட உணவகத்தில் 2003 ல் உருவாக்கப்பட்டது) சுவிஸ் இரைப்பை விருதில் சிறந்த . திரு பரமேஸ்வரன் சுதாகர் முன்னாள் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இவரது உணவுகள் கூட ஆயுர்வேத உணவுகள் தான் உணவுடன் ஒரு ஆயுர்வேத பானம் சேர்த்து வழங்க வேண்டும்

ஆனால் மாம்பழ லஸ்ஸி ( ஒரு இனிப்பு இன்னும் ) மற்றும் சாய் ( சூடான தேநீர் ) தவிர, எதுவும் இல்லை.

மேற்குலக நாடுகளில், குறிப்பாக குளிர்ந்த தேநீர் மிகவும் பிரபலமாக உள்ளது , குளிர் பானங்கள் குடிக்க விரும்புகின்றனர் குடிக்க எதுவும் இல்லை. இதை உணர்ந்த சுதாகர் ஒரு நீண்ட பகுப்பாய்வு பிறகு இந்த இனிமையான மூலிகைத்தேனீரை உருவாக்க்கினார். இது மேற்கத்திய மற்றும் தூர கிழக்கு கலாச்சாரத்திற்கு நிறைவான ஒருங்கிணைப்பாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து இப்போது அறிமுகமாகி இருக்கும் முருங்கா முருங்கையின் மருத்துவ குணத்தை முழுமையாகக்கொடுக்க விரும்பி பூ, காய், இலை, என்று பல ஆய்வுகளை தொடர்ந்தார் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்த ஆய்வு இன்று முழுமை பெற்றுள்ளது

எதிர்காலத்திட்டம்

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை ‘யாக்கை’ என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு – தசையை வளர்க்கின்றது
புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு – இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகின்றது

அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று சொல்வார்கள்.

1 இனிப்புச் சுவை
2 புளிப்புச் சுவை
3 காரச் சுவை
4 உவர்ப்புச் சுவை
5 துவர்ப்புச் சுவை
6 கசப்புச் சுவை
இனிப்பு;புச் சுவை

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

உவர்ப்புபுச் சுவை

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

துவர்ப்புச் சுவை

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. ஆதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:  வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

உணவு உண்ணும் முறைகள்

உலக நாடுகளில் குடிநீரை பாதுகாப்பான குடிநீர் பருகும் நிலை என்பது மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றது.  குடிநீரினால் தான் இன்றைக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீரை பருகும் போது புதிய, புதிய நோய்கள் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சுகாதாரமில்லாத குடிநீரால் செங்கமாரி (மஞ்சள்காமாலை),கொலறா வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகிறது. உலகில் பல நாடுகளில் சுத்திகரிக்கப்படாத கொதிக்கவைக்காத தண்ணீரை நேரடியாகவே குடிக்கும் நிலைதான் காணப்படுகின்றது.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணிகளாக மக்களிடம் விளிப்புனர்வு இல்லாமை கலாச்சாரம், மதம் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.

பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.

தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே நீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

எமது இரு வேறு தாரிப்புகள் இதற்கு உதவி செய்கின்றது. ஆம் நாம் நீரை ஆகாரமாக்கி அதில் ஆரோக்கியமும் கலந்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை தருகின்றோம்.

அண்டத்தில் பிண்டத்தில் என்ற பழமொழியின் உன்மையை உணர்ந்த மனிதனால்தான் உன்மையான உணவை உண்ணமுடியும் ஆம் திட உணவு கால் பங்கும் முக்கால்பங்கு திரவஉணவும் தான் ஒரு முழு உணவாகும் இத்தத்துவத்தை உணர்ந்தவர்கள் சீனா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகள் இது போன்ற உணவு முறையை கொண்டுள்ளது. இவர்கள் தான் மனித ஆயுளின் 120 ஆண்டுகளையும் தாண்டி வாழ்கின்றனர் என்பது உலகறிந்த உன்மை.

எமது திட்டமானது முதலில் சுவிசில் இருக்கும் மக்களிடம் நீராகாரம் என்பது வெறும் சாயமும் இனிப்பும் கலந்த பாணமாக இல்லாது ஆரோக்கியமானதாக மாற்றுவதே. அதன் முன்னெடுப்புகள் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக ஒரு நாளைக்கு (2012 கணக்கெடுப்பின் படி சுவிசின் மக்கள் தொகை 7.997 மில்லியன். இவர்களில் 1000ல் ஒருவரை எமது தயாரிப்பை நுகர வைப்பது தமிழர்களிடம் 100ல் ஒருவரை எமது தயாரிப்பை நுகர வைப்பது ஏன் தமிழர்களிடம் மட்டும் கூடுதல் விகிதாசாரம் என்றால் அவர்களுக்கு ஆயர்வேதம் சொல்லிதெரிய வேண்டிதில்லை. எனவே நாம் இவ்விரண்டு நுகர்வாளர்களையும் சென்றடைய முனைப்புடன் செயல்பட்டு வருகின்றோம்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...