Tuesday, September 19th, 2017

“சம்பந்தனின் ஏதேச்சதிகாரத்தை கண்டித்து மாவையின் கொதிப்பு

Published on January 31, 2014-10:26 am   ·   No Comments
mahinda and sampanthanஜெனிவா தீர்மானத்தை வலுவாக மாற்ற வேண்டும். அதற்காக மக்களை ஒன்று திரட்டவும் தயாராக வேண்டும்.” என்று தாம் தீர்மானம் நிறைவேற்றியதாக, திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கடந்த 26.01.2014 அன்று கூடிய, இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு தெரிவித்திருந்தது.
உண்மையில் நடந்தது என்ன?
பாராளுமன்ற கூட்டங்களின் போதும், கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பின் போதும், சம்பந்தனுக்கும், மாவைக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண்பாடுகள், மோதல்கள் வருவதுண்டு. அப்போதெல்லாம் மாவை, “நான் உங்களோட நிறைய பேச வேணும். இதில பேச விரும்பேல்ல.” என்று சொல்லிக்கொண்டே வந்தார். மாவையின் இந்த பேச்சின் அர்த்தம், அதன் உள்நோக்கம் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் ஏனையவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாவை மட்டும் ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏறத்தாழ ஆறு மாதங்களாக காத்திருந்தார். அப்படி என்ன வாய்ப்பு?
அது தான் கடந்த 26.01.2014 அன்று கூடிய இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழுவின் சந்திப்பு!
சந்திப்பு தொடங்கியதும்…
நீறு பூத்து நீத்துப்போக விடாமல், ஏறத்தாழ ஆறு மாதங்களாக, பார்த்துப்பார்த்து தகதகவென தகிக்க வைத்துக்கொண்டிருந்த மாவையின் கோபத்தீ, முகடுடைத்து குமுறி கொப்பளித்தது. அந்த நீதித்தீயின் கொப்பளிப்பிலிருந்து… சூடு ஆறாத சில பல சிதறல்கள்! இதோ.
“முதலமைச்சர் வேட்பாளராக நிற்க எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி யார் முடிவெடுத்தது. இது ஒரு சிலர் மட்டும் எடுத்த முடிவு. மற்ற கட்சிகள் எல்லாமே எனக்கு முழு ஆதரவு தெரிவிச்சது. அவர்கள் எனக்கு ஒருபோதும் இடைஞ்சலா, எதிரா நிற்கேல்ல.
18 வயசில இருந்து இளைஞர் அணி, அப்படி இப்படி என்று சொல்லி 43 வருசமா கட்சிக்காக பாடுபட்டிருக்கிறன். சிறைக்கு போய் வந்திருக்கிறன். எனக்கு தகுதி இல்லை. என்னில நம்பிக்கை இல்லை என்று சொன்னால் பிறகு ஏன் நான் கட்சியில இருப்பான்? இன்றைக்கு கூட்டியிருக்கிற இந்த கூட்டத்த அன்றைக்கு கூட்டி முடிவெடுத்திருக்க வேண்டும்.
(கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவையா? விக்கினேஸ்வரனா? என்று பெரும் இழுபறி நிலையில் இருந்த போது, இலங்கை தமிழரசுக்கட்சியினர் மத்தியகுழு கூட்டத்தை கூட்டச்சொல்லி சம்பந்தனை பகிரங்கமாக வலியுறுத்தியும் அவர் கூட்டத்தை கூட்டாததும், சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இலங்கை தமிழரசுக்கட்சியினர் மத்தியகுழு கூட்டத்தை அவசரமாக கூட்டி மாவை தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றியதும், மத்தியகுழுவின் இந்த முடிவுக்கு மாறாக செயல்பட்டால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்திருந்ததும், சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த தயாராகியிருந்ததும் நீங்கள் அறிந்ததே.)
ஒரு சிலர் மட்டும் தனிச்சு முடிவெடுக்கிறதெண்டால், (சம்பந்தன், சுமந்திரன் இருவரை மட்டும் தவிர, இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த மற்றைய எல்லோரும் மாவைக்கு தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருந்தமையை கவனத்தில் கொள்ளவும்.) பிறகு என்னத்துக்கு இந்த கட்சி, மத்தியகுழு எல்லாம். கலைத்து விட்டுப்போங்கோ. “நான் என்ட பதவியை றிசைன் பண்றன்” என்று குமுறி வெடித்து, மாவை தனது இருக்கையை விட்டு எழும்பி வெளியே செல்ல ஆயத்தமாக, உடனே மற்ற உறுப்பினர்கள் அவரது கையை இழுத்துப்பிடித்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி, தோளில் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர்.
பின்னர், மாவையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து எல்லோரும் தமது ஆதங்கங்களை, விமர்சனங்களை கொட்டித்தீர்த்து கொண்டிருந்தனர். (சம்பந்தன் புருவங்களை மேலே உயர்த்தி கண்ணை அகல திறந்து கொண்டு, வாயை “ஆ” என்று திறந்து பிடித்தவாறு கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். சுமந்திரனோ, மூச்சு விடும் சத்தம் கூட கேட்டு விடாதபடி கப்சிப் என்று இருந்தார். அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, தான் வாய் திறந்தால் தனக்கு சவுக்கடி பலமாய் விழும் என்பது.)
இப்படியே ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்த பேச்சுகளும், ஏச்சுக்களும் அப்படியே கிழக்கு மாகாணம் நோக்கி நகர்ந்து விட்டது.
கிழக்கு மாகாணத்தில தண்டாயுதபாணிய யார் முதன்மை வேட்பாளராய் நிறுத்தினது? யார் இந்த தண்டாயுதபாணி? அவர் எப்படி இதுக்குள்ள வந்தவர்? 40 வருசமா கட்சிக்காக உழைத்த கந்தவனம் கோணேஸ்வரன் இருக்கும் போது எப்படி இந்த தெரிவு நடந்தது? 30, 40 வருசமா கட்சிக்காக உழைத்தவர்கள் உள்ளுக்குள்ள இருக்கும் போது, வெளியால இருந்து ஆட்கள கொண்டு வந்து போட்டு கட்சிக்குள்ள இருக்கிற ஆட்கள ஓரம் கட்டுறீயள். இதையே தான் வடக்கிலயும் செய்தனீயள். விக்னேஸ்வரனுக்கு வடக்கு மண்ணை பற்றி என்ன தெரியும்? அரசியலை பற்றி என்ன தெரியும்? கட்சிக்காக என்ன செய்தவர்? கடந்த காலத்தில வடக்கில ஜனநாயக போராட்டங்கள் நடக்கேக்க எல்லாம் இவையள் எங்க போயிருந்தவியள்? என்று கேள்வி கணைகள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.
(சம்பந்தன், சுமந்திரன் இருவர் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுத்து, கிழக்கு மாகாணசபை தேர்தலில் தண்டாயுதபாணியை முதன்மை வேட்பாளராக நிறுத்தியதை அறிந்த நீங்கள், தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்த கடைசி நேரங்களில் சம்பந்தன், மூதூர், கிளிவெட்டி பகுதிகளில் இரவு நேரத்தில் வீடு வீடாகச்சென்று கந்தவனம் கோணேஸ்வரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்ததையும், சதி செய்து தன்னை தோற்கடித்த சம்பந்தனை, “தேர்தல் வந்து விட்டால் மட்டும், ஊர்களுக்குள் இறங்கி 16, 18 வயது இளைஞனை போல துறுதுறுவென தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடும் சம்பந்தன், மற்றைய நாள்களில் தனது முதுமையையும், உடல் நலக்குறைவையும் காரணம் காட்டி கொழும்பில் நன்றாக படுத்து தூங்குவார்.” என்று கந்தவனம் கோணேஸ்வரன் விமர்சித்து (எது உண்மையோ அதை போட்டுடைத்து) கொழும்பிலிருந்து ஞாயிறு வெளிவரும் பிரபல தமிழ் பத்திரிகையில்; பத்தி எழுதியிருந்ததையும் அறிந்ததுண்டா?)
எவ்வளவு தான் வெட்டு குத்துகள் நடந்தாலும், சம்பிரதாயத்துக்காக எல்லோருக்கும் அழைப்பு விடுத்து விட்டு, இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக இரா.சம்பந்தன்,  ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என்ற அறிவிப்பு வழமை போலவே இம்முறையும் வெளியாகும். (பிழையானவர்களை வெளியேற்ற திராணியில்லாத, தப்பானவர்களை மறுபடியும் மறுபடியும் தெரிவு செய்து பதவி கொடுத்து அழகு பார்க்கும் வருத்தப்படாத மத்தியகுழு வாழ்க! வாழ்க!)
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...