Sunday, November 19th, 2017

அதிர்ச்சி தகவல்! வன்னியில் வேலிகள் பயிரை மேய்கின்றன!

Published on February 3, 2014-4:41 pm   ·   No Comments

uno-fவன்னி பெருநிலப்பரப்பில் தமிழ் பெண்களின் இந்த அவலத்தையும், வறுமையையும், கையறு நிலையையும், தமக்கு சாதமாக பயன்படுத்தி, தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஒரு சில காமுகர்கள் நுனிப்புல் மேயும் வேலையை ஆரம்பித்துள்ளனர். சில இடங்களில் வறுமையிடம் மானம் தோல்வியடைந்து விடுவதால், வறுமையிடம் மானம் சரணடைந்து விடுவதால் காமுகர்கள் மொத்தத்தையும் பிரித்து மேய்ந்து விடுகின்றனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்திய அரசின் நிதியுதவியிலான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோராக யுஎன் ஹபிடாட் எனும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனம் செயல்படுகின்றது.
பு யுஎன் ஹபிடாட் துக்குடியிருப்பு வேணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோம்பாவில் பகுதியில் மட்டும் தன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 50 வீடுகளை கண்காணிப்பதற்காக ‘வீட்டுத்திட்ட கண்காணிப்பாளராக’ சு என்பவரை நியமித்துள்ளது.

‘காசுக்கான வேலை’ எனும் திட்டமுறையில் (ஐந்து கட்டங்களாக) வீட்டுத்திட்ட வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதல் கட்டமாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு, மக்கள் வீட்டுக்கான அத்திபார வேலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு, கட்டு வேலைகளை முடிக்க வேண்டும். பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் மூன்றாம் கட்டமாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு, லிண்டர் இட்டு மட்டம் கட்டுதல் வேண்டும். பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் நான்காம் கட்டமாக வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு, கூரை வேலைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் ஐந்தாம் கட்டமாக வழங்கப்படும் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு, தரை வேலைகள் முடிக்கப்பட்டு நிலை, ஜன்னல், கதவுகள் பொருத்தப்படல் வேண்டும்.
யுஎன் ஹபிடாட்இலச்சினை பொறிக்கப்பட்ட சிலீப்பை (அதில் பணத்தொகை எழுதப்பட்டிருக்கும்) வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் சு கொண்டு வந்து கொடுத்ததும், பயனாளிகள் அந்த சிலீப்பை ‘மக்கள் வங்கி’க்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கியில் பயனாளியின் பெயருக்கு சிலீப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை பாஸ் ஆகியிருந்தால் பணத்தை பெற்றுக்கொண்டு வந்து வீடு கட்டுவதற்கான வேலைகளை தொடங்கி விடுவர். (இப்படி ஐந்து கட்டங்களாக சு சிலீப்பை கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.)
சு சிலீப்பை கொடுத்தால் மாத்திரமே, வீட்டுத்திட்ட பயனாளிகள் அதை பணமாக்க முடியும். அந்தந்த கட்டங்களுக்கான வேலையை செய்ய முடியும். இந்த இடத்தில் தான் சு தனது பேரம் பேசும் வேலையை காட்டுகின்றார்.
வாழ்க்கைத்துணையிழந்த இளம் விதவைப்பெண்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள், பெண்களை மட்டும் அங்கத்தவர்களாக கொண்ட குடும்பங்கள் (வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள்), வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியலில் இருந்தால், அவர்களிடம் தன்னுடன் கொழும்புக்கு வந்தால் மட்டுமே வீட்டுத்திட்டம் கிடைக்கும் (சிலீப்பை தருவேன்), வீட்டுத்திட்டம் வேண்டும் என்றால் தன்னுடன் ‘அதுக்கு’ வருமாறு பச்சையாகவே கேட்டு விடுகின்றார். யுத்தம் எல்லாவற்றையும் தின்று விட்டது. இழப்பதற்கு என்று இனி நம்மிடம் எதுவும் இல்லை. அடை மழைக்கும், அனல் வெயிலுக்கும் குந்தியிருக்க ஒரு வீடாவது வேண்டுமே, வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இன்னும் எத்தினை காலத்துக்கு வீடில்லாமல் இந்த குடிலுக்குள் சீவியத்தை ஓட்டுவது? என்ற அவர்களின் நியாயமான, அத்தியாவசியமான, அவசர தேவையை, சு இப்படி பேரம் பேசி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கின்றார். உடன்பட்டு வர மறுப்பவர்களுக்கு தொல்லைக்கு மேல் தொல்லை கொடுத்து கல்லையும் கரைய வைத்து விடுகின்றார்.
இதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதி மக்கள், 32 ரூபாவுக்கு விற்கப்படும் ‘ஸ்டார் கதிரோட்டை’ தமக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட நிதியில் (நான்காம் கட்ட நிதி) கொள்வனவு செய்து கூரை வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் யுஎன் ஹபிடாட் நிறுவனத்தின் கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதி வீட்டுத்திட்ட கண்காணிப்பாளரான வசந்தகுமார், மற்றுமொரு ஓடு தயாரிக்கும் நிறுவனத்துடன் (ஒரு ஓட்டின் விலை 39 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.) பேரம் பேசி விட்டு, ’32 ரூபாவுக்கு விற்கும் ஓடு தரமற்றது. நாங்கள் வந்து வீட்டு வேலைகளை மதிப்பிடும் போது அந்த ஓடுகளை நீங்கள் கட்டாயம் மாற்ற வேண்டி வரும். பிறகு உங்களுக்கு தான் வீண் செலவு. எனவே 39 ரூபாவுக்கு விற்கும் ஓட்டையே கொள்வனவு செய்து, வீட்டு கூரை வேலைகளை முடிக்க வேண்டும்.’ என்று மக்களை நிர்ப்பந்தித்து, ஓடு தயாரிக்கும் அந்த நிறுவனத்துக்கும் நல்ல வருமானத்தை பெற்றுக்கொடுத்து, அந்த நிறுவனத்திடம் தான் பேசிய பேரத்தொகையையும் குறைச்சல் இல்லாமல் பெற்று வருகின்றார்.
இது மட்டுமல்லாமல் வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணல், சல்லி, கருங்கற்கள், சீமெந்து கற்கள் (அரிந்து விற்கப்படும் கற்கள்), இரும்பு கம்பிகள், கட்டுக்கம்பிகள், சீமெந்து பைகள் போன்ற கட்டுமான பொருள்கள் விடையத்திலும் அதனுடன் தொடர்புடைய வர்த்தக கம்பனிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் பேரம் பேசி விட்டு, தான் எந்த நிறுவனத்துடன் பேரம் பேசிக்கொண்டாரோ அந்த நிறுவனத்திடம், அல்லது, குறித்த கம்பனியின் நாமத்தை உடைய கட்டுமான பொருள்களையே கொள்வனவு செய்து வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் மக்களை நிர்ப்பந்தித்து, காசு மேல் காசு பார்த்து வருகின்றார்.
குறித்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் (பாலியல் தொல்லைக்கு, இம்சைக்கு உள்ளான பெண்கள்) முல்லைத்தீவு மாவட்ட இந்திய வீட்டுத்திட்ட நேரடி கண்காணிப்பாளரிடம் முறையிட்டதை அறிந்த, யுஎன் ஹபிடாட் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட வீட்டுத்திட்ட முகாமையாளரும், வீட்டுத்திட்ட தொழில்நுட்ப அதிகாரியும், இந்திய வீட்டுத்திட்ட நேரடி கண்காணிப்பாளரின் வீடு தேடிச்சென்று, அவரிடம் ‘குறித்த சம்பவங்களை பகிரங்கபடுத்த வேண்டாம் என்றும், உங்களுக்குள் மட்டும் இந்த விசயம் இருக்கட்டும். வேண்டுமானால் உங்களுக்கு யுஎன் ஹபிடாட் நிறுவனத்தில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை சம்பளம் கிடைக்கக்கூடியவாறு மேலதிகமாக வேலை ஒன்றை பெற்றுத்தருவதாகவும் பேரம் பேசலில் கடந்தவாரம் ஈடுபட்டுள்ளனர்.
தினக்கதிருக்காக வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர் கழுகுகண்

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...