Tuesday, September 19th, 2017

வாலாட்ட வேண்டாம்- இந்தியாவுக்கு இத்தாலி கடும் எச்சரிக்கை

Published on February 10, 2014-4:43 pm   ·   No Comments

dogஇந்திய மீனவர்கள் இருவரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய கடற் படையினர் இருவர் மீது கடற்கொள்ளை ஒழிப்பு சட்டம் மற்றும் பயங்கவாத தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்தியா வழக்கு தொடுக்குமானால் இத்தாலிய அரசாங்கத்துடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியா கொண்டுள்ள உறவு பாதிக்கப்படும் என இத்தாலி எச்சரித்துள்ளது.

கடற்கொள்ளை ஒழிப்புக்கான படையணியைச் சேர்ந்த இந்த இரண்டு கடற் படையினரும் 2012 பெப்ரவரியில் இந்தியக் கடலோரம் அருகே இந்த இந்திய மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என தவறாக நினைத்து சுட்டுவிட்டனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தப் படையினர் மீது கடற்கொள்ளை ஒழிப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு முன்னெடுக்கப்படும், ஆனால் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது என இந்தியா சென்ற வாரம் கூறியிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இம்மாதம் பிற்பகுதியில் இந்திய உச்சநீதிமன்றத்தில் நடக்கவுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தாலியர்கள் இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளார்கள் என்றாலும் இவர்களால் இந்தியாவுக்கு வெளியில் செல்ல முடியாது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...