Monday, November 20th, 2017

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் வன்முறை- ஒருவர் பலி – 77பேர் காயம்

Published on February 18, 2014-8:37 am   ·   No Comments

Manus Island 1பப்புவா நியூகினியாவின் மனுஸ் தீவிலுள்ள ஒஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுள்ள வன்முறையில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 77 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒஸ்ரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்ற ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளை சேர்ந்த 1300பேர் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமிலேயே வன்முறைகள் வெடித்துள்ளன.

தலையில் காயமடைந்த அந் நபரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்ததாக ஒஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் இன்று தெரிவித்துள்ளார்.  படுகாயமடைந்துள்ள 13 பேரில் இருவர் சிகிச்சைக்காக ஒஸ்ரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தடுப்புக் காவலில் இருந்தவர்கள் வெளியில் வந்தததைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.  முகாமில் இருந்தவர்கள் காவல்துறையினரையும் பாதுகாப்பு ஊழியர்களையும் நோக்கி கற்களையும் போத்தல்களையும் வீசியதாக ஒஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த முகாமிலிருந்து 35பேர் தப்பிச்சென்றனர். இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்துள்ளது.  மனுஸ் தீவிலுள்ள இந்த முகாமுக்கு வெளியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலைவரை இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஒஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார்.

அண்மைய வருடங்களாக முக்கியமாக இந்தோனேஷியா உட்பட படகுகளில் வந்த ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒஸ்ரேலியா அரசாங்கத்தின் இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.  கொல்லப்பட்டவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று அறிவிக்கப்படவில்லை. எனினும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஈரான், ஈராக் நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.  மனுஸ் தீவில் இலங்கையர்கள் உட்பட 1,300 பேர் தங்கியுள்ளனர்.Manus IslandASYLUM SEEKERS ACCOMODATION MANUS ISLAND

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...