Friday, September 22nd, 2017

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published on February 18, 2014-9:01 am   ·   No Comments
santhan_murukan_perarivalan 1பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.  முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த மரண தண்டனையை குறைக்க கோரி 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.

ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்கள் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 13 ஆண்டுகளாக அந்த கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதாலும், கடந்த 23 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதாலும் தங்களது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், “ஏற்கனவே கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதால் 15 பேர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நடைமுறையில் தங்கள் தண்டனையையும் குறைக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 3 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை நடத்தியது.

அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் குலாம் இ.வாகனவதி, சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது வாதத்தை ஏற்கவில்லை என்பது இன்று உறுதியானது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீதிமன்றின் அறிவுறுத்தலால் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு கயிறை நெருங்கிய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அடுத்தக்கட்டமாக விடுதலை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தமிழ் உணர்வாளர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகளுக்கும் அதற்காக போராடிய அனைவருக்கும் பேரறிவாளனின் தாய் நன்றி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பேரறிவாளன் தாய் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர். சென்னை கோயம்பேட்டில் பட்டாசு வெடித்து பேரறிவாளன் உறவினர்கள் கொண்டாடினர். இதேவேளை,தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட தகவல் வேலூர் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு முதலே அவர்கள் தீர்ப்பு குறித்து பதட்டத்துடன் இருந்துள்ளனர்.  சிறை வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பேரறிவாளன் நீண்ட நேரம் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. தீர்ப்பு குறித்து தகவலறிந்த சக கைதிகள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினி தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததுடன் ஆனந்த் கண்ணீர் விட்டுள்ளார். அவர் பெண்கள் சிறையில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோரது உறவினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். சிறை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...