Monday, November 20th, 2017

வவுனியாவில் “தமிழ் தேசிய விரோதிகள்” மீதான தாக்குதல் சம்பவங்கள்!

Published on February 20, 2014-7:53 am   ·   No Comments
1சன் டிவி வடிவேல் என்று அழைக்கப்படுபவர் கடந்த 31.01.2014 அன்று, பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும், புஸ் என்று அழைக்கப்படும் கதிர்காமராஜா கடந்த 09.02.2014 அன்று இளைஞர்களால் வாள் வெட்டுக்கு ஆளானதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
யார் இந்த சன் டிவி வடிவேல்? யார் இந்த புஸ்? (றிப்பீட்டு…)
சன் டிவி வடிவேல்:
தற்போது வவுனியா வைரவபுளியங்குளம் வீதியில் வடிவேலு எனும் பெயரில் உணவகத்தை நடத்தி வரும் இவர், முன்னாள் ரெலோ உறுப்பினர் ஆவார். ரெலோவில் இருக்கும் போது, சன் டிவி அலைவரிசையை (கேபிள் வழி) வவுனியா நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு சென்றதால், இவர் எல்லோராலும் சன் டிவி வடிவேல் என்று அறியப்பட்டவர்.
சில காலத்தின் பின்னர், ரெலோவிலிருந்து புளொட்க்கு தாவி, அவர்களின் ஆதரவுடன் சன் டிவி ஒளிபரப்பை நடத்தி வந்தார். பின்னர் அங்கிருந்து ஈ.பி.டி.பி குழுவுக்கு தாவி, குட்செட் வீதியில் அமைந்திருந்த ஈ.பி.டி.பி முகாமுக்குள் தனது ஒளிபரப்பு கலையகத்தை வைத்து, சன் டிவி ஒளிபரப்பை நடத்தி வந்தார்.
(சில உதிரி கட்சிகள் ஒன்று சேர்ந்து வெளிச்சவீடு (கலங்கரை விளக்கம்) சின்னத்தில் தேர்தல் ஒன்றை சந்தித்தபோது, சன் டிவியை ஒளிபரப்புபவர் எனும் ஒரே ஒரு அறிமுகத்துக்காக இவர், 5,000க்கு கிட்டவான வாக்குகளை அத்தேர்தலில் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.)
இராணுவ புலனாய்வாளர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய இவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து வயது கட்டுப்பாட்டு அடிப்படையில் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து திரும்பும் மக்களை அச்சுறுத்தி (நகை, பணம்) கப்பம் கோரல்களில் ஈடுபட்டு சொத்துச்சுகம் அநுபவித்ததோடு, பொலிஸ், இராணுவம் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களை ஏவி விட்டு தமிழ் இளம் பெண் பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டைகளையும் பறித்தெடுக்கச்செய்தார்.
பின்னர் குறித்த சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல் பாசாங்கு செய்து, பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் குடும்பத்தினரிடம் சென்று, “அடையாள அட்டைகளை தான் மீட்டுத்தருவதாக உறுதிமொழி கூறி, இராணுவ புலனாய்வாளர்கள் எங்கெல்லாம் விசாரணைக்கு அழைக்கிறார்களோ, அங்கெல்லாம் அந்த பெண் பிள்ளைகளுக்கு பாதுகாவலர் போல் (நடிப்பு சுதேசி) கூட்டிச்சென்று (குறிப்பாக கொழும்புக்கு) இராணுவ புலனாய்வாளர்களுக்கு கூட்டிக்கொடுத்து தானும் கூத்தடித்து, பல தமிழ் இளம் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழித்தவர். அத்தோடு அன்றைய காலத்தில் சன் டிவி வடிவேல் என்றால், அவரது இடுப்பில் பிஸ்டல் காணப்படாத நாட்களே இல்லை.
படையப்புலனாய்வு போராளிகள் பல இடங்களில், பல தடவைகள் இவரது வரவுக்காக (தாக்குதலுக்கு தயார் நிலையில்) காத்திருந்த போது, இவர் தனது வழமையான உந்துருளியில் பயணிக்காமல், வீதியால் பயணித்துக்கொண்டிருக்கும் முச்சக்கர வண்டி, மற்றும் உந்துருளி சாரதிகளை தன்னிடமுள்ள பிஸ்டலை காட்டி மிரட்டி அதில் தொத்திப்போன சந்தர்ப்பங்களுமுண்டு.
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் வவுனியா மாவட்டத்துக்குள் பகிரங்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் கால் பதித்த போது, இந்தியாவுக்கு தப்பியோடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த இவர், 2009 இறுதி யுத்த முடிவுக்குப்பின்னர் இந்திய றோவின் முகவராக வவுனியாவுக்கு திரும்பி வைரவபுளியங்குளம் வீதியில் வடிவேலு எனும் பெயரில் உணவகத்தை நடத்தி வருகிறார்.
தான் றோவின் விசுவாசி என்று தம்பட்டம் அடிப்பதற்காக, இந்திய தேசியக்கொடியின் நடுவிலுள்ள சக்கரத்தை ஒத்த மாட்டு வண்டில் சக்கரங்களை தனது உணவகத்தின் முன்னால் காட்சிப்படுத்தியுள்ளார்.
கடந்த 31.01.2014 அன்று நடந்தது என்ன?
“யங் ஸ்டார்” விளையாட்டு கழகமும் மைதானமும் அமைந்துள்ள பகுதியில் எப்போதும் ஒரு இளைஞர் கும்பல் ஒன்று நின்று கொண்டு, அப்பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்வி நிலையங்களுக்கு கற்றலுக்காக சென்று வரும் பெண் பிள்ளைகளிடம் வம்பிழுப்பதும், கிண்டல் கேலி செய்வதும், தகாத வார்த்தை பிரயோகங்களை பேசுவதும் உண்டு.
கடந்த 31.01.2014 அன்று, அவ்வழியால் கற்றலுக்காக சென்று வந்த சன் டிவி வடிவேலுவின் மகளிடமும் அவர்கள் தகாத வார்த்தை பிரயோகங்களை பேசி விட்டனர். இதையறிந்த சன் டிவி வடிவேல் “கிளம்பிட்டாய்யா… கிளம்பிட்டாய்யா…” எனும் கணக்காக அவர்களிடம் ஒத்தையாக சண்டைக்கு போன போதே, அந்த இளைஞர்களால் தாக்கப்பட்டார் என்பதே உண்மை நிலையாகும்.
தனது பெண் பிள்ளை வயதுக்கு வந்த பின்னர், இன்று ஒரு அப்பாவாக சன் டிவி வடிவேலுவுக்கு எந்தளவுக்கு மனசு வலிக்குதோ, எந்தளவுக்கு பொறுப்புகள் கூடியிருக்கிறதோ, அதே போன்று தான், அன்று வடிவேலு இராணுவ புலனாய்வாளர்களுக்கு கூட்டிக்கொடுத்து தானும் கூத்தடித்து, சீரழித்த பல இளம் பெண் பிள்ளைகளின் அப்பாக்களுக்கும் வலித்திருக்கும். பொறுப்புகள் இருந்திருக்கும்.
“எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிரான மறு தாக்கம் உண்டு.” எனும் தர்க்க விதி (பூகோள விதி) போல், “வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்.” எனும் முதுமொழி போல், மொத்தத்தில் அன்று விதைத்ததையே இன்று வடிவேல் போன்றவர்கள் அறுவடை செய்கிறார்கள்.
ஆகமொத்தத்தில், “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.” எனும் உண்மையும், இவர்களை போன்றவர்களுக்கு உரைக்க ஆரம்பித்திருக்கிறது.
யார் இந்த புஸ்? வரும் வாரம் எதிர்பாருங்கள்…1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...