Friday, November 17th, 2017

இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்த்து கொடுக்கும் கிராம அபிவிருத்தி சங்க தலைவன்

Published on March 13, 2014-8:47 am   ·   No Comments

kopapulavu 1முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்ப்பதில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த நான்கு வருடங்களும் பொது சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகளை எதிர்த்தும், இராணுவ மயப்படுத்தப்படும் சூழலை கண்டித்தும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் பல்வேறு பொது சமுக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய போராட்டங்களின் தீவிரத்தை சகித்துக்கொள்ள முடியாத சிறீலங்கா அரசு, பொது சமுக அமைப்புகளை நலினப்படுத்தும் கைங்கரியத்துக்குள் ஆழமாக இறங்கியுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வற்றாப்பளை, கேப்பாப்பிலவு பகுதிகளைச்சேர்ந்த மாதர் அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், கமக்கார அமைப்புகள், முன்பள்ளிகள், ஆலய பரிபாலன சபைகள் என்று பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை, ஒட்டுசுட்டான் முள்ளியவளை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் ‘டவர் காம்ப்’க்கு கடந்த 12.02.2014 அன்று ஒரு மணிக்கு, அழைத்து சிறீலங்கா இராணுவத்தினர் சந்தித்துள்ளனர். சந்திப்புக்கான அழைப்பு தொலைபேசி அழைப்புகள் மூலமே விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், ‘இராணுவ சேவைக்கு பெண் பிள்ளைகளை இணைத்துத்தருமாறு’ இராணுவத்தினரால், சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, ‘ஊர்களுக்குள் புதிதாக யார் யார் வருகிறார்கள், போகிறார்கள்’ என்பது பற்றி கண்காணிக்குமாறும், தகவல் தருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தவர்களுக்கு, குறிப்பாக பெண்கள் சிலருக்கு, தொலைபேசி அழைப்பு எடுத்து, ‘நீங்க வரேல்ல தானே, நாங்க ஒங்கள தான் பாத்திருந்தது, நீங்க வந்தா நல்லம், போன மொறயும் நீங்க வரேல்ல தானே, அடுத்த மொற நீங்க கட்டாயம் வாரது, சரியா’ என்று கெஞ்சல் ஸ்தாயி விளையாட்டுகள் காட்டியதாகவும் அறிய முடிகின்றது.

சூழ்ச்சியின் சூத்திரதாரி!

இராணுவத்தினர் காணிகளை சுவீகரிக்க கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரால் ஒப்புதல் கடிதம் வழங்கி, கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகளை (400 ஏக்கர்கள்) சிறீலங்கா அரச படைகள் சுவீகரித்துக்கொண்டு, மாற்று காணிகளில் மக்களை பலவந்தமாக குடியமர்த்தவும், கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் உருவாகவும் காரணமாகிய கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் பரமேஸ்வரனே குறித்த சந்திப்பை ஒழுங்கமைத்துள்ளார்.

சடுதியாக மாற்று நிலங்களில் குடியமர்த்தியதால், என்ன தொழிலில் ஈடுபடுவதென்றே தெரியாமல் மக்கள் குழம்பியிருந்த நிலையிலும், ‘இராணுவத்தினர் தந்த மாற்று நிலங்கள் வேண்டாம், தமக்கு தமது பூர்வீக நிலங்களே வேண்டும்’ என்று மக்கள் போராடிக்கொண்டிருக்க, இவரோ, கேப்பாப்பிலவு பிரதேசத்திலிருந்து பணிநிலை மாற்றலாகிச்செல்லும் பிரிகேடியர் சமரசிங்கவுக்கு (2013ம் வருடம்) விழா எடுப்பதற்காக, கிராம அபிவிருத்தி சங்கத்தின் மூலம் ‘கட்டாயம் எல்லோரும் 1000 ரூபா வீதம் காசு தர வேண்டும், இல்லையென்றால் சங்க பதிவிலிருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று மக்களை மிரட்டி பணம் வசூலித்தும், சங்கத்தின் இருப்பு பணத்தை செலவழித்தும், 70,000 ஆயிரம் ரூபா செலவில் சமரசிங்கவுக்கு ஒன்றரை பவுன் தங்கச்செயின் அணிவித்து அழகு பார்த்தவர் என்பதும், சமரசிங்கவின் ஞாபகார்த்தமாக மாதிரிக்கிராமத்தின் 03வது ஒழுங்கைக்கு ‘சமரசிங்க வீதி’ என்று பெயரை சூட்டி பிரிவு உபசார விழாவை நடத்தியவர் என்பதும்,நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டியதே!

தினக்கதிர் வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...