Monday, November 20th, 2017

உத்தரப்பிரதேசத்தில் இரு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் செய்து கொலை

Published on May 30, 2014-7:32 am   ·   No Comments
10325646_767666346610944_2186177907319580207_nஉத்தர பிரதேசத்தில் 2 தலித் சகோதரிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பதுவான் மாவட்டத்தை சேர்ந்த கத்ரா கிராமத்தில் வசித்த 14 மற்றும் 15 வயது 2 தலித் சகோதரிகள் கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போய்விட்டனர். அந்த சிறுமிகளின் பெற்றோரும் கிராமத்தினரும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த 2  சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காணாமல் போன அந்த சகோதரிகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம்  செய்தது தெரிய வந்தது. இந்த போராட்டத்தில் அந்த 2 சிறுமிகளும் இறந்துவிட்டனர். உடனே சிறுமிகளின் உடல்களை மரத்தில் தூக்கு போட்டு தொங்க விட்டுவிட்டு  பலாத்கார கும்பல் தப்பியோடிவிட்டது. உடல்களை மீட்ட குடும்பத்தினர், பிரேத பரிசோதனைக்கு போலீசிடம் ஒப்படைக்க மறுத்தனர்.
மேலும், குற்றவாளிகளை  உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சர்வேஷ் யாதவ் மற்றும்  ரக்ஷாபால் யாதவ் என்ற 2 போலீஸ் கான்ஸ்டபிள்கள், பப்பு யாதவ் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யும்படி பெற்றோர் உஷியாத்  காவல்நிலையத்தில் புகார் செய்தனர். எனினும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள்  மறியலைத் தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...