Thursday, January 18th, 2018

ஓஸ்ரேலியா நியூசவுத்வேல்ஸ் யோகா ஆச்சிரமத்தில் பாலியல் பலாத்காரம்- விசாரணையில் அம்பலம்

Published on December 4, 2014-4:48 pm   ·   No Comments

Satyananda Yoga Ashram.ஓஸ்ரேலியாவின் மிகவும் பழமையான யோகா ஆச்சிரமத்தில் நிகழ்ந்த பாலியல் துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் அதன் நிர்வாகிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் மங்குரோவ் மவுண்டன் பகுதியிலுள்ள சத்தியானந்தா யோகா ஆச்சிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பிள்ளைகளிடம் சுவாமி அகதானந்தா சரஸ்வதி தமது காம இச்சைகளைத் தீர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி ஆராயும் அரச ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளித்தவர்கள், ஆச்சிரமத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை விபரித்தார்கள்.

ஆச்சிரமத்தின் சமகால பொறுப்பாளர் ஆரன் கெரிகன் நேற்றுமுன்தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி, பாதிக்கப்பட்டவர்களுக்கான மன்னிப்புக் கோரினார்.

பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் கடந்த மார்ச் மாதம் ஆச்சிரமத்தின் இணையத்தளத்திற்கு மின்னஞ்சல்களை அனுப்பி, ஆச்சிரமத்தின் சாமியர் தம்மை எவ்வாறெல்லாம் துஷ்பிரயோகம் செய்தார் என்பதை விபரித்திருந்தனர். அந்த சமயத்தில், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஆச்சிரமம் எச்சரித்திருந்தது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி ஆராயும் அரச ஆணைக்குழுவானது, 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரித்தது. அதன் தலைவரான சுவாமி அகதானந்தா 1989ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்த சமயம், 1991ஆம் ஆண்டு அவர் நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆச்சிரமத்தில் தங்கியிருந்த பிள்ளைகளில் அலெசியா புச்சனன் என்பவரும் ஒருவர். அவர் தமது 13 ஆவது வயதில் ஆச்சிரமத்திற்கு அனுப்பப்பட்டார். சுவாமி அகதானந்தாவின் துணையாக அறியப்பட்ட ஷிஷி என்பவர் சில சமயங்களில் கருணை மிக்கவராக இருந்ததாலும், பல சமயங்களில் கொடூரமானவராக திகழ்ந்தார் என அலெசியா தெரிவித்தார்.

தாம் 15 வயதை எட்டிய சமயம், தாம் சுவாமியின் குடிலுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டதாகவும், அங்கு ஷஷியின் முன்னிலையில் சுவாமியாருடன் உடலுறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அலெசியா தெரிவித்தார். ஆச்சிரமத்தில் நடக்கும் விஷயங்களை வெளியே சொன்னால் தம்மை தாக்குவதாக அச்சுறுத்தினார்கள் எனவும் அவர் கூறினார்.Satyananda Yoga Ashram.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...