Tuesday, September 19th, 2017

ஒஸ்ரேலியா சிட்னியில் முஸ்லீம் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளாக சிலரை பிடித்துள்ளனர்

Published on December 15, 2014-8:29 am   ·   No Comments

sydney1சிட்னியின் மார்ட்டின் பிளேஸ் பகுதியிலுள்ள சிற்றுண்டிச் சாலையில் ஆயுதபாணியொருவர் பலரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளதாக நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிசார் தெரிவித்துள்ளார்.  சிட்னியின் மத்தியிலுள்ள வணிக நகரில் இயங்கும் Lindt Chocolat Café என்ற சிற்றுண்டிச்சாலையில் மூன்று பேர் கைகளை உயர்த்திய வண்ணம் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறதென ஏபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

சில பணயக் கைதிகள் அரேபிய எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்ட கறுப்புக் கொடியை சிற்றுண்டிச்சாலையின் ஜன்னல்களில் அழுத்திக் கொண்டிருந்தார்கள் எனவும் ஏபீசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டிச்சாலையைச் சுற்றி பெருமளவு பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஆயுதபாணியின் நோக்கம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவொரு பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நகர்வும் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் அடிப்படையில், மார்ட்டின் பிளேஸ், சிட்னி ஒப்பெரா ஹவுஸ், சீபீடி நீதிமன்ற வளாகம் போன்றவற்றில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக்குரிய தேசிய பாதுகாப்புக் குழு அவசர கூட்டத்தை நடத்துகிறது.  இது மிகவும் கவலை தரக்கூடிய சம்பவம் எனக் கூறியுள்ள பிரதமர், நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாருக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.sydney1sydney3sydney2

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...