Friday, November 17th, 2017

சுவிட்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி அமோக வெற்றி

Published on October 19, 2015-1:05 pm   ·   No Comments

2015-waehlen-live-teaserIசுவிட்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி எதிர்பார்த்ததை விட அதிக ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.  200 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ் சபையில் சுவிஸ் மக்கள் கட்சி 65 ஆசனங்களையும் சோசலிசக் கட்சி 43 ஆசனங்களையும் சமஷ்டி ஜனநாயக கட்சி 33ஆசனங்களையும் பெற்றுள்ளன.

சுவிஸ் மக்கள் கட்சியை பொருத்தவரை கடந்த 2011ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை விட, இந்தாண்டில் கூடுதலாக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதவிகித வாக்குகள் சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

முதலாம் உலக போருக்கு பின்னர், சுவிஸ் அரசியலில் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள முதல் கட்சி என்ற பெயரையும் சுவிஸ் மக்கள் கட்சி பெற்றுள்ளது.
குடியேற்றம் மற்றும் அகதிகள் விடயத்தில் கடும்போக்கை கொண்ட சுவிஸ் மக்கள் கட்சியின் வெற்றி எதிர்காலத்தில் அகதிகள் தொடர்பான முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

46 ஆசனங்களை கொண்ட மேல் சபையில் டபிள்யூ.ஜி 19 ஆசனங்களையும் சமஷ்டி ஜனநாயக கட்சி 8 ஆசனங்களையும் சி.வி.பி 7 ஆசனங்களையும் சோசலிசக்கட்சி 6 ஆசனங்களையும் சுவிஸ் மக்கள் கட்சி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...