Tuesday, February 20th, 2018

ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் களவாடப்பட்ட கைப்பையையும் கையடக்கத்தொலைபேசியும் கண்டுபிடித்த சீனப்பெண்- ஹட்டனில் சம்பவம். VIDEO

Published on November 4, 2015-3:47 pm   ·   No Comments

DSC00663ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் களவாடப்பட்ட கைப்பையையும் கையடக்கத்தொலைபேசியும் சீனப்பெண் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் இலங்கையின் மத்திய பகுதியான ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.

அப்பெண்ணின் கைப்பையை திருடிய நபர் பொலிஸாரில் கைது செய்யப்பட்டதுடன் களவாடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த சீன பெண்ணினி; கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 18.11.2015 அன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரசாத் லியனகே உத்திரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவதுஇ

கடந்த மாதம் 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தந்த சீன யுவதியும் அவருடைய கணவனும்இ கடந்த 02.11.2015 அன்று இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியொருவருடன் இணைந்து பேராதெனியவிலிருந்து நானுஓயா நோக்கி உடரட்டமெனிக்கே புகையிரதத்தில் பயணம் செய்த சந்தர்ப்பத்தில் அவரது கைப்பை திருடப்பட்டிருந்தது.

அட்டன் ரொசல்லை புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து சீனப் பெண்ணின் கைப்பையை புதையிரதத்தில் பயணம் செய்த நபரொருவர் பறித்துச் சென்றுள்ளார். அப்பையில் பணம் மற்றும் பெறுமதியான கையக்கத்தொலைபேசி ஆகியன இருந்துள்ளன. பின்னர் சீன ஜோடி அட்டன் பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து அப்பெண் தனது மற்றைய கையடக்கத்தொலைபேசியின் ஊடாகஇ ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது காணாமல் போன கையடக்கத்தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அட்டன் பொலிஸார் ஜி.பி.எஸ் (புடழடியட Pழளவைழைniபெ ளுலளவநஅ (புPளு) தொழில்நுட்ப உதவியுடன் கைப்பை இருக்குமிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

திருடப்பட்ட கைப்பையில் நவீனரக கைத்தொலைபேசி ஒன்று இருந்ததால் இது சாத்தியமானதாக அட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில்இ சந்தேகநபரை கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் தனது நண்பரொருவரின் வீட்டில் இருந்தபோது வைத்து கைது செய்த பொலிஸார் கைப்பையையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பையை திருடிய நபர் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பையில் அமெரிக்க டொலர் சீன நாணயம் உள்ளிட்ட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் இலங்கை ரூபாய் மூவாயிரமும் மற்றும் ஒரு நவீனரக கைத்தொலைபேசியும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பையிலிருந்த இலங்கை ரூபாவை சந்தேகநபர் செலவுசெய்துள்ளதோடுஇ ஏனைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்நபரை இன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறிப்பு இச்செய்தி இணையத்திருடர்களால் திருடப்படலாம்.DSC00584DSC00586DSC00602DSC00663

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...