Sunday, November 19th, 2017

பாரிஸ் தாக்குதல்: ஆயுதபாணியின் உறவினர்கள் கைது, பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

Published on November 16, 2015-3:02 pm   ·   No Comments

Ambulanceகடந்த வெள்ளிக்கிழமை பாரிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 129 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் ஏழு பயங்கரவாதிகளில் ஒருவரது உறவினர்களை பிரெஞ்சுப் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் முதலாவதாக பெயர் குறிப்பிடப்படும் ஓமர் இஸ்மாயில் முஸ்தபாவிற்கு 29 வயதாகும். பற்றக்லான் இசை-நடன அரங்கில் நிகழ்ந்த இரத்தக் களேபரத்தில் இவரது துண்டிக்கப்பட்ட விரல் மீட்கப்பட்டிருக்கிறது.

முஸ்தபாவின் தந்தை, சகோதரர், மைத்துனி அடங்கலாக ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இந்த அரங்கில் சடலமாகக் கிடந்த ஆயுதபாணியொருவரின் அருகில் சிரியாவில் வழங்கப்படும் கடவுச்சீட்டு இருந்திருக்கிறது. இந்த நபர் கடந்த மாதம் செர்பியாவின் ஊடாக சென்றவர் என்பதையும், இவர் செர்பியாவில் அரசியல் தஞ்சம் கோரியவர் என்பதையும் செர்பிய உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கறுப்புநிறக் காரில் ஆயுதங்கள்

பாரிஸ் நகரின் கிழக்குப் பிராந்தியத்தில் சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிறக் காரொன்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

தாக்குதலை நடத்த வந்த சிலர் மதுபான விற்பனை நிலையத்தையும், சிற்றுண்டிச்சாலையையும் தாக்குவதற்கு இந்தக் காரையே பயன்படுத்தியிருந்தார்கள் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதில் இருந்து ஏகே-47 ரகத்தைச் சேர்ந்த பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

பரந்த விசாரணை

பாரிஸ் தாக்குதல் பற்றி விசாரிக்கும் உத்தியோகத்தர்கள் ஐரோப்பா முழுவதிலும் கவனத்தை செலுத்தியிருக்கிறார்கள்.

பெல்ஜிய பொலிசார் பல சந்தேகநபர்களைக் கைது செய்திருக்கிறார்கள். தாக்குதலை நடத்திய நபர்களில் இரண்டு பேர் பிரசல்ஸ் நகரில் வசித்த பிரெஞ்சுக்காரர்கள் என சட்டத்தரணியொருவர் கூறினார்.

தாக்குதல்களுக்காக பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்கள் பெல்ஜியத்தில் வாடகைக்காக பெறப்பட்டவையெனத் தெரிகிறது.Ambulance

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...