Monday, September 25th, 2017

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

Published on November 24, 2015-3:32 pm   ·   No Comments

fishermanஇந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  கொழும்பு பம்பலபிட்டி ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி சென்று அங்கு மகஜர் கையளித்தனர்.

அனைத்துலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு தேசிய கடற்றொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்ட பேரணியில், நாட்டிலுள்ள அனைத்து மீனவ சங்கங்களும் பங்குப்பற்றின.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள், இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து அவரிடம் சுமார் 10 ஆயிரம் மீனவர்களின் கையொப்பத்துடனான மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தினால் இலங்கை கடல் வளங்கள் முற்றாக அழிக்கப்படுவதாகவும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்ட மகஜரே கையளிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.fisherman

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...