Monday, September 25th, 2017

எமது பிரச்சினை பற்றி அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை- வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றிய தலைவர் அரியகுமார் குற்றச்சாட்டு ( வீடியோ)

Published on December 23, 2015-5:55 pm   ·   No Comments

vadaகடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தினால் எமது பிரதேச கடல்வளம் பாதிக்கப்படும் என்று வடமாகாணசபை அதிகாரிகள் தொடக்கம் சகல மட்டங்களுக்கும் எடுத்து கூறியும் அதனை கவனத்தில் எடுக்காது இத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எமது பிரச்சினை பற்றி அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றிய தலைவர் அ.சா.அரியகுமார் தெரிவித்தார்.

யாழ். வரமராட்சி கிழக்கு மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அரியகுமார் இதனை தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றியமும் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கமும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தி;னர்.
கடல் நீரிலிருந்து நன்னீர் பெறப்படும்போது, உப்புச் செறிவுடைய நீர் கடலினுள் பாய்ச்சப்படுவதால் கடல் வளமும், மீன் வளமும் பாதிப்படையும் எனத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிகாரிகளே! மக்களின் வாழ்வை அழிக்கத் துணைபோகாதீர்கள்’, ‘எங்கள் கடலில் சொட்டு நீரையும் எடுக்க விடமாட்டோம் போன்ற வாசகங்களை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த உண்ணாவிரதத்தினை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கல்வியாளர் ஒன்றிய தலைவர் சசிதரன், மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க தலைவர் ஆகியோரின் கருத்துக்களையும் இங்கே பார்க்கலாம்.

vada




Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...