Thursday, February 22nd, 2018

தாரைதப்பட்டை – திரைவிமர்சனம்

Published on January 14, 2016-12:30 pm   ·   No Comments

cinemaபரதேசி படத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பொங்கல் விருந்தாக ரிலீசாகியிருக்கும் படம் தாரை தப்பட்டை.

பொதுவாக ஊர்களில் நடக்கும் கரகாட்டம் எந்தளவுக்கு கவர்ச்சி ஆட்டமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த இயல்பை அப்பட்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பாலா.

தஞ்சாவூர் பின்னணியில் நடக்கும் கதையில் சசிக்குமார் நடத்தும் ஒரு கரகாட்டக் குழுவின் ஆட்டக்காரியாக வருகிறார் வரலட்சுமி.

இருவருமே ஒரு சந்தர்ப்பத்தில் கணவன், மனைவியாகி விட, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் வரலட்சுமியை கதறக்கதற கற்பழித்து விடுகிறார் வில்லன் சுரேஷ்.
அப்புறம் என்ன? கற்பழித்தவனுடன் சசிக்குமார் போடும் வன்முறை வெறியாட்டமே கதை.

பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சசிக்குமார் முதல் முறையாக அவருடைய இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறார். வழிக்காத தாடி, நீளமான தலைமுடி என கெட்டப்பில் தனி கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

வரலட்சுமியுடன் அவர் காட்டும் நெருக்கம் அப்படி ஒரு அன்யோன்யம். ஒரு காட்சியில் சசிக்குமார் மேளம் அடிக்க, அதற்கு வரலட்சுமி இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட அங்கே நிஜ கரகாட்டத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்.

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் இந்தப்படத்தில் நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அவரும் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

செழியனின் ஒளிப்பதிவில் தஞ்சாவூரின் மண் வாசனையை ஸ்கிரீனில் மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

இளையராஜாவின் 1000-மாவது படமென்பதால் இப்படத்தின் பாடல்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றாற் போல் மீண்டும் தனது கிராமத்து இசையால் வசியப்படுத்துகிறார் பாடல்களிலும், பின்னணி இசையிலும் இசைஞானி இளையராஜா.

தாரைதப்பட்டை மொத்தத்தில் அகோர தாண்டவம்cinema

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...