Wednesday, January 17th, 2018

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற கம்பன் விழா 2016

Published on March 27, 2016-10:42 am   ·   No Comments

06அகில இலங்கை கம்பன் கழகம் ஏற்பாடு செய்த கொழும்பு கம்பன் விழா 2016 கோலாகலமாக நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
நேற்றைய விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பஞ்ச ஈஸ்வரங்களை கொண்டிருப்பதால் இலங்கையை சிவபூமி என சிறப்பிக்கிறார்கள். ஆனால் இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதால் இராமயண பூமி என சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகி;றது. இன்னும் சொல்லப்போனால் இலங்கை ராமாயண பூமியே என்பதை வருடம் தோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ஆண்டு தோறும் விமர்சையாக கம்பனுக்கு விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையை பறைசாற்றுகின்றது என என் மனதுக்குப்படுகின்றது என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயயத்தின் பரிபாலன சபை தலைவரமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். அகில இலங்கை கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழா 2016 மூன்றாம் நாள் (26) இரண்டாம் அமர்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு தலைமை உரை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இராமயணத்தில் சுந்தரகாண்டம் பற்றி நன்கு அறிந்த பலர் இந்த சபையிலே இருப்பீர்கள். இதற்கு சுந்தர காண்டமென பெயர் சூட்டப்பட்ட காரணங்களை அறிஞர்கள் பலவாறாக கூறுவார்கள். சுந்தர காண்டத்தில் சொல்லப்படும் கதைக்களத்தில் ராமன் நேரடியாக தோன்றுவதில்லை. அக் காண்டத்தில் அனுமன் இலங்கை வந்து சீதா பிராட்டியை தேடுவதும் – காண்பதும்- ராமனின் கணையாழியை காட்டி அறிமுகமாகி பின் அவளின் சூடாமணியை அடையாளமாகப் பெற்று தனது பாராக்கிரமத்தை ராவணனுக்கும் அவன் படையினருக்கும் காட்டி விட்டு -அதாவது அரக்கர் தன் வாலில் வைத்த தீயால் இலங்கையின் ஒரு பகுதியை எரியூட்டிவிட்டு – ராமனை சென்றடைந்து ‘கண்டேன் சீதையை’ எனக்கூறி இராமனுக்கு புத்துணர்வு அளிக்கின்றார்.
எனவே சுந்தர காண்டத்தில் அனுமனே வியாபித்திருப்பதாலும் அனுமனுக்கு சுந்தரன் என்று ஒரு நாமமும் இருப்பதால் சுந்தர காண்டமென பெயரிடப்பட்டுள்ளது என்பார்கள்.அப்படியில்லை;லை – சீதை ஒரு வருடகாலம் சிறையுற்று பட்ட துன்பம் இந்த காண்டத்தில் நீங்குவதால் அதை சுந்தரமாக கருதி சுந்தர காண்டமென கம்பர் பெயரிட்டுள்ளார்; என்பாரும் உளர்.

இராமாயணம் மனித குலத்துக்கு கிடைத்த ஒரு பெரும் பொக்கிசம் என்றால் அதில் சுந்தர காண்டம் விலை மதிப்பற்ற வைடுரியமெனலாம்.சுந்தர காண்டத்தை முறைப்படி பாராயணம் செய்பவர்களுக்கு தோசங்கள் அண்டாது: துயரங்கள் தீண்டாது: சகல ஈஸ்வரங்களும் வந்தடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.ஆழகான சுந்தர காண்டத்தில் அன்னை சீதை அழகு: கதையும் அழகு: அதை மொழியும் சொற்களும் அழகு: காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயன் அழகு: நற்பலன் கொடுக்கும் அதன் மந்திரங்கள் அழகு: அது சொல்லும் அசோக வனம் அழகு: அது அமைய பெற்றிருக்கும் இலங்;காபுரி அழகு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வாறு நான் சுந்தர காண்டத்தின் சிறப்பை சொல்வது ராமாயணத்தை முற்றும் கற்றுத் தெளிந்தவன் என்ற அடிப்படையில் அல்ல. அப்படி செய்தால் இங்கு ராமாயணத்தில் துறை போனவர்கள் இருக்கும் சபையில் கொல்லன் தெருவில் ஊசி விற்பவன் போலாவேன்.சுந்தர காண்டம் நான் வாழும் மற்றும் சமுக பணியில் இயங்கும் பிரதேசமான நுவரெலியாவை களமாக கொண்டிருப்பதாலே அதன் பெருமையை சொல்கின்றேன். நான் கம்பன் குடுபத்தின் அங்கத்தவராக நுவரெலியிலிருந்து சிதைம்பன் சார்பாக பெண் வீட்டில் இருந்து வந்துள்ளேன்
நுவரெலியா மாவட்டத்திpலும் அதனையொட்டிய பகுதிகளிலும் இராமாயணத் தடங்கள் பல இருக்கின்றன. அங்கெல்லாம் அடிக்கடி சென்று மக்களை அதாவது இன்றும் மார்கழி மாதத்தில் பஜனை பாடி ஊர்வலம் வரும் வழக்கத்தை கைவிடாத தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கும் போதெல்லாம்; என்னை அறியாமலே எனக்குள் சுந்தர காண்டம் பாராயணம் செய்யப்படுவதாலேயே தான் இன்று இலங்கை மக்களுக்கு குறிப்பக தமிழ் பேசும் மக்களுக்கு சேவையாற்ற இந்த நல்லாட்சியில் பாக்கியம்; கிடைத்ததாக கருதுகின்றேன். அதன் ஒரு பேறாக இன்று இந்த கம்பன் விழாவிலே தலைமையுரை ஆற்றும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது.
உண்மையிலே சொல்லப் போனால் சீதை சிறையிருந்த அசோக வனம் நுவரெலியாவை ஒட்டிய ஹக்கலவில் இருக்கின்றது. அந்த அசோக வன எழிலை இன்றும் அங்குள்ள பூங்காவின் சுற்றயலில் காணலாம். அங்கே தான் சீதா பிராட்டி நீராடிய சீதா எலிய நீரோடை அமைந்திருக்கின்றது. அனுமனின் பாத சுவடுகள் காணப்படும் அப்பிரதேசத்தில் புராதன சீதை அம்மன் ஆலயமெழுந்துள்ளது.
சீதை, ராமன், லட்சுமணன், ஆஞ்சநேயன் எழுந்தருளியிருக்கும் அந்த ஆலயத்தின் அறங்காவல் சபையின் தலைமை உறுப்பினனான நான் இராமாயணத்தின் இலக்கிய செழுமை பற்றி புகழுரைக்கும் இம்மண்டபத்தில் அதன் ஆன்மீக கூறு தொடர்பில் முக்கியமானவன் என்ற வகையில் கிடைத்த உரையாற்றும் சந்தர்ப்பத்துக்கு கம்பன் கழகத்துக்கு நன்றியையும் ஸ்ரீ ராமனுக்கும் ஆஞ்சநேயனுக்கும் என் பணிவையும் தெரிவித்துக்கொள்ள வேண்டியது என் கடமை.
சீதாக் கொட்டுவ என தற்போதும் சிங்களத்தில் அழைக்கப்படும் சீதை முதலில் சிறை வைக்கப்பட்ட இடத்திலிருந்து ராவணன் பின் அவளை தன் ரதத்திலேற்றி அசோக வனத்துக்கு அழைத்துச் செல்கின்றான். இலங்கையின் வனப்பான பகுதிகளை சீதைக்கு காட்ட வேண்டும் என்ற ஆவலோடு காடுகளடங்கிய பிரதேசங்களோடு சென்ற பாதையில் இன்றும் மரங்கள் முளைக்காமல் புல் பூண்டுகள் மட்டுமே காணப்படுவதாக கூறுகிறார்கள். அவ்வாறு செல்லும் போது ராவணன் சீதைக்கு சத்துமிக்க சோற்றுக் கவளங்களை அல்லது உருண்டைகளை வழங்கியதாகவும் ராவணன் கைகளால் வழங்கிய எதனையும் சீதை உண்ண மறுத்து வாங்கி வீசிய உருண்டை பகுதிகள் இப்பகுதில் காணப்படுகின்றன. சிங்கள மக்கள் அதனை சீதாக் குலிய என்றும் தமிழர்கள் ராவணன் கொள்கட்டை எனன்றும் அழைப்பதோடு அதனை மருந்தாகவும் அதிஸ்ட பொருளாகவும் பேணுகின்றார்கள. இந்த உருண்டை துகள்களை ஆய்வு செய்த டோக்கீயோ மற்றும் டெல்லி விஞ்ஞான நிறுவனங்கள் இவை 5000 ஆண்டு பழமை வாயந்தவை என்கின்றார்கள்.
சீதையை தேடி வந்து அனுமன் முதலில் கால்வைத்த பவளமலை புசெல்லவா பகுதியிலுள்ள புரட்டோப் தோட்டத்தில் காணப்படுகின்றது.சீதையின் சூடாமணியை பெற்றுக்கொண்ட அனுமன் ராமனை காணச்செல்லும் முன் ஓய்வெடுத்த மலையுச்சி லபுகலை தோட்டத்தில் அமைந்துள்ளது. மணி கட்டுதர் என்ற பெயரால் அழைக்கப்படும் அங்கு ராமர் கோவில் அமைத்து தோட்ட மக்கள் வழிபாடு செய்கின்றார்கள்.
அதற்கு அண்மித்த பகுதியில் கொண்டகலை எனும் ஊர் இருக்கின்றது. அதற்கு அப்பெயர் வர காரணத்தை அப்பிரதேசவாசிகள் வருமாறு கூறுவார்கள். அசோக வனத்துக்கு சீதையை ராவணன் தேரில் அழைத்து வந்த போது இப்பிரதேசத்தை மிக வேகமாக கடந்தமையால் சீதையின் கேசம் அதாவது கொண்டை களைந்ததாகவும் ஆகவே அது கொண்டை களை என அழைக்கப்படுகிறது என்பார்கள்.
அனுமனின் கண்களுக்கு தெரியாமல் பின் சீதையை மறைத்து வைக்க அசோக வனத்திலிருந்து அழைத்துச் சென்ற இடமாக இருப்பது கொத்மலை பிரதேசத்திலுள்ள இராவணாகொட என்று இன்றும் அழைக்கப்படும் பிரதேசமாகும். நெடிய மலைகளும் வளைவுகளும் கால்வாய்களும் கொண்ட இப்பகுதி இராவண ராட்சியத்தின் முக்கிமான கேந்திரமெனலாம்.
போருக்கு முன் சிவனை வணங்கி அதீத பலம் பெற ராவணன் மைந்தன் மேகநாதன் இலிங்க வழிபாடு செய்த இடமே தற்போது காயத்திரி பீடமாக நுவரெலியாவில் விளங்குகின்றது. ராமாயண போரின் உச்ச கட்டத்தில் ராவணனின் மூத்த மகன் இந்திரஜித் அனுமனின் பலத்தை சிதறடிக்க சீதை போன்று தோற்றம் காட்டிய இடம் சீதாவாக்கை என அழைக்கப்படுகின்றது. இது நான் அடிக்கடி பயணம் செய்யும் அவிஸாவளை பகுதியில் இருக்கினறது.
இவை எல்லாவிடங்களையும் தவிர முக்கியமான இடம் நுவரெலியா வெளிமடை பாதையில் அமைந்துள்ள திவுறும்பொல ஆகும். ஆதை தமிழ்ப்படுத்தினால் சத்தியம் செய்யும் இடமெனலாம். இங்கு தான் இலட்சுமணனைக் கொண்டு தீயெழுப்பச் செய்து அதற்குள் நுழைந்து அக்னி பரீட்சை மூலம் தூய்மையை ராமனுக்கும் முழுவுலகுக்கும் சீதை காட்டினாள்.
இன்று இந்த இடம் பௌத்தர்களின் பாராமரிப்பில் இருப்பதும் அனுராதபுர போதி மரத்தின் கிளையிலிருந்து வளர்ந்த அரசமரமும் விகாரையும் அங்கிருப்பதும் அதன் புனிதம் பேணபடுவதற்கு சான்றாக உள்ளது. மேலும் ரம்பொட பிரதேசம் அனுமன் சீதையை தேடிய பகுதியாகவும் ராமர் படை இருந்தமையாலும் இங்கு சின்மயா மிசனால் ஸ்ரீ பக்த அனுமன் ஆலயம் எழுப்பப்பட்டு உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் மலையகத்துக்கு வந்து வழிபாடு செய்வது மயைகத்துக்கும் ராமாயணயத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தொடர்ந்தும் வலுப்பெறச் செய்கின்றது.
இலங்கை மக்களின் கர்ண பரம்பரைக் கதைகள் ஊடாகவும் புவிசார் அமைப்புகள் ஊடாகவும் கம்ப ராமாயணம் ஊடாகவும் இன்னும் பல ஆய்வுகளை எதிர் காலத்தில் முன்னெடுக்கவும் இலங்கையை ராமாயண பூமியெனவும் அங்கீகரிக்கவும் இங்குள்ள அறிஞர்கள் ஊக்கமும் ஆக்கமும் காட்டுவார்களென நம்புகிறேன்S4310016 (2)03050611S4310017 (2)S4310062 (2)S4310079 (2)S4310093 (2)

 

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...