Friday, September 22nd, 2017

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூலின் வெளியீட்டு விழா

Published on April 6, 2016-11:50 am   ·   No Comments
12920351_991291567573784_2853130753714608392_nஎமது நாட்டில் நாட்டில் வாராந்தம் பல நூல் வெளியீட்டு விழாக்கள்நடைபெறுகின்றன.  மிக மிக அழகான விழா மண்டபம்,சிறப்பானஒழுங்கமைப்பு, நேரந்தவறாமை ,மண்டபம் நிறைந்தவாசகர்கள்,சிறப்பான தலைமைத்துவம் ஆகியவற்றுடன் கூடிய நூல்வெளியீட்டு விழா ஒன்று சென்ற வாரம் யாழ்ப்பாணத்தில்நடைபெற்றது.
யாழ்ப்பாண நினைவுகள் எனும் சொல்லை அச்சு , இலத்திரனியல்ஊடகங்களில் கடந்த 4 வருடங்களாகவே இடைவிடாது  உச்சரிக்கவைத்துக்  கொண்டிருக்கும் யாழ் இந்துக் கல்லூரியின் புகழ்பூத்தமாணவர்களில் ஒருவராகிய வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூலின் வெளியீட்டு விழாவே அது.
தினகரன் வாரமஞ்சரியின் பிரமத ஆசிரியர் தே. செந்தில் வேலவர் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து நூல் வெளியீட்டுரையைச் செய்ததுடன் நூலை வெளியிட்டும் வைத்தார்.
வேதநாயகம் தபேந்திரனுடனான நேர்காணல் சென்ற வார தினகரன்வாரமஞ்சரியில் பிரசுரமாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. விழாஅழைப்பிதழில் விழா ஆரம்பமாகும் நேரம் பிற்பகல் 3 மணி 34நிமிடம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுவென்ன வித்தியாசமாக உள்ளதே. சரி போய்த்தான் பார்ப்போமேஎன 3.30 மணிக்கே சென்றோம்.சரியாக 3.34 மணிக்கு மங்கலவிளக்கேற்றல் நிகழ்வு ஆரம்பமாகியது.வேட்டி கட்டி தமிழ்பாரம்பரியத்தை கூறும் வகையி விருந்தினர்கள் இருந்தமைவிழாவின் அழகிற்கு உச்சமாக இருந்தது.
அதிலும் ஓர் புதுமை. விழா அழைப்பிதழில் உள்ள பிரமுகர்கள்யாரும் அழைக்கப்படாது விழாவிற்கு வந்திருந்தே மதிப்பு மிக்கபெரியோரில் ஆண், பெண் இரு பாலாருமாகஅழைக்கப்பட்டிருந்தனர்.  பாடசாலையில் படிக்கும் இளம் மாணவன் ஒருவர் அறிவிப்பை மிகஅழகாக செய்தார்.
அந்த மாணவனும் இளைஞர் பாராளுமன்ற அறிவிப்பு போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தை பெற்ற  மகன் உமாசங்கர் சங்கீத் எனநூலாசிரியர் கௌரவித்த போது பின்னர் தெரிய வந்தது.
மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து  இறைவணக்கம் நல்ல வளமானகுரலை உடைய கைதடியைச் சேர்ந்த திருமதி.ப.பரமேஸ்வரி அவர்களால் வழங்கப்பட்டது.
தமிழ்மொழி வாழ்த்து நூலாசிரியரின் மனைவி திருமதி சற்குணேஸ்வரி தபேந்திரன்,திருமதி சிறீஸ்வரி புஸ்பராசாஆகியோரால் இனிமை நிறைந்த குரலில் வழங்கப்பட்டது.
அடுத்ததாக வரவேற்பு  நடனம் கைதடியைச் சேர்ந்த தரம் 5பாடசாலை மாணவி செல்வி கனிகா பிறேம்நாத்தினால் வழங்கப்பட்டது.
இவற்றைத்  தொடர்ந்து விழாவின் பிரமுகர்கள் விழா மேடைக்குச்சென்றார்கள். வரவேற்புரையை நூலாசிரியரின் ஆசிரியரும் யாழ்ப்பாணத்தில் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவென தனியார் கல்லூரி நடத்துபவருமான இரத்தினம் பாரதிதாசன் நிகழ்த்தினார். வரவேற்புரை என்ற விடய வரையறையை மீறாத அவரது சிறப்பியல்பு பாராட்டத்தக்கது.
அடுத்து விழாவை  யாழ்ப்பாண பாடசாலை மருத்துவ அதிகாரியும் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவருமாகிய மருத்துவர் வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தலைமை ஏற்றுவழிநடத்த ஆரம்பித்தார்.
தபேந்திரனை தான் அறிந்து கொண்ட விதம் அவரது எழுத்துக்களின்சிறப்பு ஆகியவற்றையும் யாழ்ப்பாண நினைவுகளை தான் எவ்விதம் அறிந்து கொண்டேன் என்பதையும் சபையோர ரசிக்கும் வண்ணம் சுந்தரத் தமிழில் உரைத்தார்.
மருத்துவ அதிகாரி ஒருவர் நூல் வெளியீட்டிற்கு தலைமை தாங்க தபேந்திரன் அழைத்துள்ளாரே என கேள்விக்குறியுடன் வந்திருந்த சபையினரில் சிலர் அவரது பேச்சின் திறத்தால் ஈர்க்கப்பட்டதனைகாண முடிந்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தந்த எழுத்தாளர் வரிசையிலே செங்கை ஆழியானைக் குறிப்பிட்டு அவரது கைப்பிடித்து நடக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
அடுத்த தலைமுறையில் தற்போது என் பேரன்புக்குரிய தம்பி வேதநாயகம் தபேந்திரனின் கைப்பிடித்து நடக்கும் பாக்கியமும் கிடைத்துள்ளது  என்றார்.
வட மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் பிரதம கண்காளரும் நூலாசிரியரின் பல்கலைக்கழக சக மாணவனுமாகிய சிவஞானம் கஜேந்திரன் வாழ்த்துரையை வழங்கினார்.
பல்கலைக்கழகங்கள் பிதுக்கி விட்ட பல்லாயிரம் பட்டதாரிகளில் தான் படித்த 3 பட்டக்கல்வி அறிவை சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் பிரயோகிக்கும் பட்டதாரிகள் சிலரே உள்ளனர்.
அவர்களில் எனது நண்பனும்“ பல்கலைக்கழகச் சக மாணவனுமாகியவேதநாயகம் தபேந்திரன் தனித்துவமானவராக தன்னை நிலைநிறுத்தி உள்ளமை பாராட்டுதற்குரியது.
பல்கலைக்கழகத்தில் எம்முடன் கற்ற காலத்தில் தன் தனித்துவதிறமையை பொது அறிவில் நிலைநாட்டி பின்னர் இலங்கைத்தமிழ்பேசும் பரீட்டசார்த்திகள் போட்டிப் பரீட்சைகளில்வெற்றியடைய பொது அறிவு நூல்களை தந்த தபேந்திரன் தற்போது புதிய பரிமாணமாக யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 1,2, 3 மூலமாகமிக வேகமாக முக்கிய இடத்தை இலங்கை தமிழ் பேசும் உலகில்தனக்கென பிடித்துள்ளார்.
அடுத்த வாழ்த்துரையை நூலாசிரியர் சமூக சேவைகள் அலுவலராக முதல் நியமனம்  பெற்றுச் சென்ற திருகோணமலை ஈச்சிலம்பற்பிரதேச பூநகர் திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைஅதிபராகிய பத்தக்குட்டி மதிபாலசிங்கம் வாழ்த்துரையை வழங்கினார்.
அவர் தனது உரையில் எமது திருகோணமலை மண்ணில் எமதுபிரதேசத்தில் தான் முதல் நியமனம் பெற்றார். போரினால் மிகவும்மோசமாகப் பாதிப்புற்ற பிரதேசத்துக்கு வந்து அவர் ஆற்றியசேவைகளும் எம்முடன் பழகிய முறைகளும் மறக்கமுடியாதவை என்றார்.
வெளியீட்டுரையை எமது தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர்ஆற்றும் போது ” யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு அடுத்த பிரிவில்உயர்தரம் படித்தவர்
கல்லூரி காலத்திலேயே இவரிடம் மிகையாக இருந்த எழுத்தாற்றலை கண்டேன். பின்னாளில் பெரிய எழுத்தாளராக வருவார் என நினைத்தேன் . அது இன்று நிறைவேறியதனை கண்டுள்ளேன்.
அடுத்ததாக நூல் வௌயீடு இடம் பெற்றது. தினகரன் பிரதமஆசிரியர் நூலை வெளியிட்டு வைக்க கிருபா லேணர்ஸ் சாரதி பாடசாலை குழுமங்களின் அதிபர் அ.கிருபாகரன் முதல் பிரதியைபப்பெற்றுக் கொண்டார். முதலாம் இணைப்பிரதியை ராஜா கிறீம்ஹவுஸ், சரஸ்வதி மஹால், ஹம்சியா மஹால் ஆகியவற்றின்உரிமையாளர் சின்னராஜாவும், நூலாசிரியரின் தாயாருமாகிய திருமதி பரிமளகாந்தி வேதநாயகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நூல் நயப்புரையை சண்டிலிப்பாய பிரதேச செயலக சமூக சேவைகள்அலுவலரும் எழுத்தாளரும் சமூக சேவகருமாகிய வேலாயுதம் சிவராசா நிகழ்த்தும் போது ” யாழ்ப்பாண வாழ்வியலை மிகச்சுவையாக தந்த நூல் தங்கள் வசம் இருக்கிறது. வாழ்வியல் ,போர்க்கால அனுபவங்கள், தொழிநுட்ப மாற்றங்கள் எனயாவற்றையும் தபேந்திரன் மிக அழகாகக் கூறி உள்ளார்.
பல நிகழ்வுகளை மாதம் திகதி ஆண்டு இட்டு மிகத் துல்லியமாகதந்துள்ளார்.
இவற்றை பத்தி எழுத்துக்கள் என்பதை இட வாழ்வியலை தரும்மிகச் சிறந்த ஆவணம் எனலாம்.
நூலுாசிரியர் வேதநாயகம் தபேந்திரன் தனது ஏற்புரையில் ” இந்தநிகழ்வுக்கு வந்திருந்த , அனுசரணை வழங்கிய யாவருக்கும் தனதுநன்றிகளைத் தெரிவித்தார்.
2014 யூலையில் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 1 நூலும், 2015யூலையில் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 2 நூலையும் தந்தேன் சொந்த முதலில் 1000 பிரதிகள் அடிப்பது என்பது மிகச் சவாலனது.
வட மாகாணம், மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் என நாட்டின் 3மாகாணங்களிலும் 5 மாவட்டங்களிலும் யாழ்ப்பாண நினைவுகள் நூலுக்கு அறிமுக விழாக்களை நடத்தி தந்த பேராதரவு நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியது.
புத்தகசாலைகள்  தோறும் சென்வாசகர்கள் வாங்கியதும், புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வந்து வாங்கி தந்த பேராதரவும் பாகம் 3 ஐமிக வேகமாக வெளிவரச் செய்துள்ளது.
பாகம் 4 நூலை இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் வெளியிட்ட பின்பு எனது வழமையான நூலாகிய பொது அறிவு நூல் வெளியீட்டிற்குசெல்லலாமென நினைக்கிறேன்.
யாழ்ப்பாண நினைவுகளுடன் கடந்த 4 வருடங்களாக ஈடுபட்டதனால்போட்டிப் பரீட்சைகளுக்கான பொது அறிவு நூல்களைவெளியிடவில்லை. அந்தப் பணிக்கு மீண்டும் செல்ல உள்ளதாககூறினார்.12417541_991515817551359_8569028332396164305_n12495097_991534267549514_8178362043350552143_n12524372_991287227574218_5062684853178983528_n12670713_991534454216162_1790692828692589379_n12920351_991291567573784_2853130753714608392_n12924336_991497410886533_8866071515361995381_n12932727_991473354222272_7673883198295088739_n12963511_991491167553824_1853472470846523018_n

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...