Monday, November 20th, 2017

ஏழை விவசாயிகளுக்கென வழங்கப்பட்ட உபகரணங்கள் அழிந்து போவதேன்?

Published on May 26, 2016-7:41 am   ·   No Comments
farmersசுனாமிக்குப்பின்னரான காலப்பகுதியில் காரைதீவுப்பிரதேச ஏழைவிவசாயிகளுக்கென அரசசார்பற்ற நிறுவனமொன்றால் வழங்கப்பட்ட அறுவடை இயந்திரம் மற்றும் உழவுஇயந்திரம் என்பன வீணாக அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன. இதனை காரைதீவு பிரதேச செயலாளர் கவனிப்பாரா? நடவடிக்கை எடுப்பாரா?  என பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
சுனாமிக்குப்பின்னர் அரசசார்பற்றநிறுவனமான சேவாலங்கா நிறுவனம் அம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசங்களின் ஏழைவிவசாயிகளின் நன்மை கருதி விவசாய அமைப்புகளுக்கு அறுவடை இயந்திரம் உழவுஇயந்திரம் நெல்பதனிடும் இயந்திரம் போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கிவைத்தது.
அந்த வகையில் காரைதீவுப்பிரதேசத்திற்கான இவ்வுதவியை இருவிவசாயஅமைப்புகள் இணைந்த ஒரு கம்பனிக்கு வழங்கியது.தமிழ்முஸ்லிம் விவசாயபிரதிநிதிகள் அங்கம்வகிக்கும் இக்கம்பனி பதிவுசெய்யப்பட்டதா இல்லையா? எனப்து தெரியாது.
இவ்வுபகரணங்கள் விவசாயஅமைப்புகளின் உறுப்பினர்களின் வயல்வேலைகள்செய்யும் சந்தர்ப்பங்களில் மானிய விலையில் வழங்குவது முதல் பல நன்மைகளை செய்துவந்தது.
ஆனால் சில வருடங்களின் பின்னர் என்ன நடந்ததோ தெரியாது. நெல்பதனிடும் நிலையம் தொடர்ந்து ஓரு குழுவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட அறுவடைஇயந்திரமும் உழவுஇயந்திரமும் அதனோடிணைந்த பெட்டி கலப்பை உள்ளிட்ட சகல உபகரணங்களும் கைவிடப்பட்டுள்ளன.
அவை காரைதீவு ப.நோ.கூ.சங்கத்திற்குச் சொந்தமான வளாகத்தில் மழையிலும் வெயிலிலும் கிடந்து துருப்பிடித்து அழிந்துவருகின்றன. விவசாயிகள் பயன்படுத்தவேண்டிய இவ்வுபகரணங்கள் ஏன் இவ்விதம் வீணாக அழிந்துவருகின்றன? அதனை அனுமதிக்கலாமா? பிரதேச செயலாளர் இதுவிடயத்தில் தலையிட்டு அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றி ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என்பதே எமது அவா என்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
இவ்வபகரணங்கள் மூலம் சம்பாதித்த பல லட்சக்கணக்கான பணத்திற்கு என்ன நடந்தது என்பது வெளிப்படையாகத் தெரியாமலுள்ளது. எவ்வளவு பணம் என்பதுகூடத் தெரியாது.
ஆரம்பத்தில் இவற்றைக் கையேற்ற கம்பனியினர் தம்மிடம் சுமார் 9லட்சருபா அளவில் நிந்தவூர் இலங்கை வங்கியில் இருப்பதாகக்கூறுகின்றனர்.இது கம்பனியின் கணக்கில் உள்ளதா?  அல்லது தனிப்பட்ட மூவரின் பெயர்களில் உள்ளதா? என்பது தெரியாது. சரி தற்போது இயங்காத அக்கம்பனியின் இப்பணத்திற்கு என்னநடக்கும்? என்பதும் தெரியாது.
இதேவேளை  நெல்பதனிடும் நிலையத்தை கையேற்ற ஒருகுழுவினர் பெற்ற பணம் வங்கியிலிடப்படாமல் கையிலிருப்பதாகச் சொல்கின்றனர்.அது சுமார் 5லட்சருபா எனச் சொல்லப்படுகின்றது. பொதுவான இப்பணம் வங்கியில் வைப்பிலிடப்படாமல் தனிப்பட்டவர்கள் கையில்வைத்திருப்பது முறையா? இவை போன்ற பல உண்மைகள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமலுள்ளன.
எனவே பொதுமக்களுக்கென அரசசார்பற்றநிறுவனத்தினர் வழங்கிய இவ்வுபகரணங்கள் இவ்வாறு சீரழிந்து போவதும் அவைமூலம் பெறப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியாமலிருப்பதும் இன்றைய நல்லாட்சியில் எதிர்பார்க்கக்கூடியதா?
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கணக்காய்வாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் நாம் முறையிட்டு அவர்கள்  தலையிட்டு பிரச்சினையை பூதாகரமாக்கமுன்பு காரைதீவு பிரதேச செயலாளர் விரைவாக தலையிட்டு இது தொடர்பில் உண்மைநிலைவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டுமென தாழ்மையுடன் கேட்கின்றோம். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் பகிரங்கமாக இவை தெளிவுபடுத்தப்படவேண்டும்.என்றனர்.
விவசாயிகளோடும் விவசாய அமைப்புகளோடும் சம்பந்தப்பட்ட காரைதீவுப்பிரதேசத்திற்கான கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய போதனாசிரியர் ஆகியோரும் இது விடயத்தில் தலைiயிட்டு பொதுப்பணத்தையும் உபகரணங்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க ஒத்துழைக்கவேண்டும் எனவும் விவசாயிகளால் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
படங்களும் தகவலும் காரைதீவு வி.ரி.சகாதேவராஜாfarmersfarmers1farmers2seedpaddyseedpaddy1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...