Friday, November 17th, 2017

மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுரத்திற்கு அடிக்கல்.

Published on August 19, 2016-5:49 pm   ·   No Comments

Puthur 2மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்சதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

மீள்குடியேற்ற இந்து கலாசார சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

புதுநகர் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தாக்களான தவராஜா, மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிநேசன் அமைச்சர் சுவாமிநாதனை அழைத்திருந்தார்.

இன்று இவ்வாலயத்திற்கு வருகை தந்த அமைச்சருக்கு மேளவாத்தியங்கள் மற்றும் சிறுவர்களின் காவடி ஆட்டம் கிராமிய நடனங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அவ்வூர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர், தந்தாமலை ஆலய பரிபாலன சபையினர், பண்டாரியான்வெளி நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் விளாவெட்டுவான் ஆலய பரிபாலன சபையினர் தமது ஆலயங்கள் சார்பாக மகஜர்களைச் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தர்மகர்த்தாக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக அவ் ஆலயத்தினைத் தரிசித்ததுடன் கலாசார மண்டபத்தினை பூர்த்தி செய்வது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

பின்னர் சிறைச்சாலை நிலைமைகளை அவதானிப்பதற்காக அமைச்சர் சுவாமிநாதனும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று அங்கு கைதிகளின் பிரச்சினைகள் கேட்டறிந்ததுடன், சிறைச்சாலை நிலைமை பற்றியும் சிறைச்சாலை அதிகாரியுடன் கலந்துரையாடினர். Puthur 2PuthurPuthur 1Puthur 3Puthur 4Puthur 5Puthur 6Puthur 7

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...