Thursday, October 19th, 2017

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி.

Published on October 22, 2016-6:01 pm   ·   No Comments

rassiaசிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் Scotland கடல் கரை சென்றுள்ளது. இதனை அவதானித்த பிரித்தானியாவும் பிரான்ஸும் ஆட்டம் கண்டது.

ரஷ்யாவின் அதி நவீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும். 2 பாரிய நவீனபோர் கப்பல்களும். மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல். மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவத்து பிரான்சின் வடக்கு கெலே கடல் ஊடாக பிரித்தானியா நோக்கி சென்றது .

இதனை அவதானித்த பாதுகாப்புப்பிரிவு உடனடியாக பிரித்தானியாவின் அதி நவீன நாசகார போர் கப்பலையும் (HMS -டங்கன்) மேலும் 6 கப்பலையும் அவ்விடம் நோக்கி அனுப்பியது. இதுவரை எச்.எம்.எஸ் டங்கன் என்னும் அதி நவீன நாசகார கப்பலை பிரித்தானியா உலகிற்கு காட்டியதே இல்லை.

பிரித்தானியாவுக்கு உதவியாக நோர்வே நாட்டின் 2 போர் கப்பல்கள் ரஷ்ய கப்பலை நோக்கி நகர. மேலும் 2 போர் கப்பல்களை பிரித்தானியா பிரான்ஸ் பக்கமாக இருந்து நகர்த்தியது.

இதனால் மொத்தம் 8 பிரித்தானிய போர் கப்பல்கள் ரஷ்யாவின் 6 போர் கப்பலை நோக்கிச் செல்ல. ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பலில் இருந்த அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உடனே கிளம்பி வானில் பறக்க. மேலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இது இவ்வாறு இருக்க நிலமையை உடனே அறிந்த ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டின் உடனடியாக ஆபிரிக்காவின் கருங்கடல் பக்கமாக தரித்து நின்ற தனது மேலதிக தாக்குதல் கப்பலை பிரித்தானியா நோக்கி நகர்த்தினார். இதனைக் கவனித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை. HMS “ரகன்” என்னும் அதி நவீன போர் கப்பலை அவ்விடம் நோக்கி அனுப்பி.

முன்னேறிய 2 ரஷ்ய கப்பலை தடுத்து நிறுத்த பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதேவேளை விமானப்படையின் விமானங்கள் உடனடியாக வானிப் சிறிப்பறந்து பிரித்தானியாவின் கரையோரங்களை நோட்டமிட ஆரம்பித்தது.

இரு நாட்டு ராஜதந்திரிகளும் உடனடியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு பேசினார்கள். ரஷ்யா… தாம் தாக்குதலுக்கு வரவில்லை என்றும். சிரியா நோக்கி தனது படைகளை நகர்த்தவே இவ்வாறு செல்வதாகவும் விளக்க முயன்றுள்ளது.

இதேவேளை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு தொடர்புகளை மேற்கொண்டு, ரஷ்யாவின் போர் கப்பலை சர்வதேச எல்லைக்குள் கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளது. பிரித்தானியாவின் கடல்படை தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும். தாங்களே பலம் பொருந்தியவர்கள் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தொலைபேசியூடாக வாக்குவாதத்தில் ஈடுபட. போர் ஒன்று மூழும் அபாயம் தோன்றியது.

பிரித்தானியாவின் 8 போர் கப்பலையும் ஊடறுத்து இடையே தனது 2 போர் கப்பலை நிறுத்தி பிரித்தானியாவை மேலும் அதிர்ச்சியூட்ட, விலாடுமிர் புட்டின் முனைந்துள்ளார். ஆனால் பிரித்தானியா படுவேகமான தனது வான் தாக்குதல் படையை தயார் நிலைக்கு கொண்டுவரவே. ரஷ்ய கப்பல்கள் பின்வாங்கிச் சென்றுள்ளது.rassia

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...