Tuesday, November 21st, 2017

மட்டக்களப்பை விற்று ஆட்டையை போடும் அரச அதிபர் திருமதி சாள்ஸ்- ஆதாரம் 01

Published on January 21, 2017-9:56 am   ·   No Comments

GA 4மட்டக்களப்பு மாவட்ட செயலக கேள்விச்சபையின் விலைமனுக்கோரல் மூலம் மோசடி அம்பலமானது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் கணணிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் கொள்வனவு செய்வதற்கான கேள்விச்சபையின் தீர்மானத்தின் மூலம் பல இலட்சங்கள் மோசடி இடம்பெற்றுள்ளது

09.12.2015 மாவட்ட செயலகத்தில் அரச அதிபரின் தலைமையில் கணக்காளர் திரு M.S.பஸீர் மற்றும் திரு M.வடிவேல் அவர்களை அங்கத்தவர்களாகவும் கொண்டு பி.ப.04.15 மணியளவில் நடைபெற்றது இக் கேள்விச்சபையின் தீர்மானத்தின் மூலம் கணணி கொள்வனவுக்காக மட்டக்களப்பு திருமலை வீதி இல 375 இல் உள்ள MacSar Network & Engineering நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

கேள்விச்சபையின் தீர்மானத்தின் படி DELL வர்க்க கணணி Intel core i 7 கணணி அலகு ஒன்றின் விலை ரூபா 107000/= எனவும் அதற்கான நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கணணிக்ககான விவரணமும் கேள்விச்சபை மற்றும் தொழில்நுட்க் குழுவினாலும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த நிறுவனத்தினால் வினியோகிக்கப்பட்ட கணணிகள் உரிய நியமங்களில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கணணிகள் DELL வகையில் Intel Core i 5 வகை கணணிகள் என்றும் அவற்றை பரிசீலித்து பார்த்ததில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் பொருளின் உண்மையான தயாரிப்பாக வாடிக்கையாளரை சென்று சேர்வதற்கும் நிறுவனத்தின் நன்மதிப்பினை உறுதிப்படுத்துவதற்காக
Service Tag என்பதன் மூலம் நிறுவனத்தின் தயாரிப்பு பொருளின் விவரணத்தினை அறியலாம் அதன்படி குறித்த நிறுவனத்தால் வினியோகம் செய்த கணணிகள் DELL Intel Core i 5 வகை என்பதும் உண்மை தன்மையை Service Tag மூலம் நிறுவனத்தின் தயாரிப்பு விவரணம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

DELL Intel Core i 5 வகை கணணியின் சாதாரண சந்தை விலை 86000/= ஆனால் 40 கணணிகள் இவ்வாறு கொள்வனவு செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இதன்படி 800000/= வரை மோசடி இடம்பெற்றுள்ளது

107000/= – (86000/=) ஒவ்வொரு கணணியிடமிருந்து 21000/= பணம் மோசடி

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இந்த நிறுவனம் மீது பல மோசடிகள் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அவ்வாறு இருக்கும்போது இந்நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதன் மர்மம் என்ன?
இவ்வாறு மோசடிகள் அறிந்தும் பிரதேச செயலாளர்கள் மெளனம் காப்பது ஏன்?
அதிகாரமா? அரசியல் அழுத்தமா?

சுமார் 800000/= மோசடி நடந்துள்ளது இதனை கணக்காய்வாளர் நாயகத்திணைக்கள அதிகாரிகள் வழமைபோல வேடிக்கை பார்ப்பார்களா?.

(தொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டுவரும் மட்டு. அரச அதிபர் திருமதி சாள்ஸை இடமாற்றாது தொடர்ந்து வைத்திருப்பதற்கு பின்புலத்தில் இருக்கும் தமிழ் அரசியல்வாதி அதன் பின்னணிகள் பற்றி அடுத்து பகுதியில் வெளியாகும்)

GA 1GA 2GA 3GA 4GA 5GA 6

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...