Tuesday, September 19th, 2017

ஜெனிவாவில் ஐ.நா. அதிகாரிகளையும் இராஜதந்திரிகளையும் சந்தித்த சுமந்திரன்.

Published on February 18, 2017-9:58 am   ·   No Comments

sumanthiranஜெனிவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு ஐ.நா. அதிகாரிகளையும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகளையும் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளையும் மற்றும் இராஜதந்திரிகளையும் சந்திப்பதற்கான வேண்டுகோளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்ற ஐ.நா.அதிகாரிகள் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கியிருந்தனர்.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுகாலை முதலாவது சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த சுமந்திரன் ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி, ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்’ என்று வலியுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா கனடா ஆகிய நாடுகளின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகளை சுமந்திரன் ஜெனிவாவில் சந்தித்தார்.
பிரிட்டன் இந்த முறை தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, 2015 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே தீர்மானத்தைக் கொண்டு வருமாறு கோரினேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் உறுதியளித்தது. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாத காலப் பகுதியில் இலங்கை அரசு தான் இணங்கிய விடயங்களைச் செயற்படுத்தவில்லை. எனவே, மேற்பார்வைப் பொறிமுறை மிக இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தேன் என சுமந்திரன் இச்சந்திப்பு தொடர்பாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், ஆணையாளர் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கையில், இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு இணங்கிய விடயங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரினேன். காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்படவில்லை, காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை, அரசியல் கைதிகள் விடுவிப்பு நடைபெறவில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. இதனை விட முற்றுமுழுதாக உள்நாட்டு பொறிமுறையூடான விசாரணைக்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஆணையாளர் எதிர்ப்பு வெளியிட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டதான பொறிமுறையே அமைக்கப்பட வேண்டும். அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும். பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு விடயங்களிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனை விரைந்து நிவர்த்திப்பதற்கு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்று கேட்டுள்ளேன் என சுமந்திரன் தெரிவித்தார். sumanthiran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...