Friday, September 22nd, 2017

நெடுந்தீவு சிறுமி படுகொலை- ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபாவுக்கு மரணதண்டனை தீர்ப்பு

Published on April 7, 2017-3:54 pm   ·   No Comments

kirupaநெடுந்தீவில் 12வயதுடைய சிறுமி லக்சாயினியை பாலியல் பாலத்காரம் செய்து படுகொலை செய்த ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என அழைக்கப்படும் கந்தசாமி ஜெயதீஸ்வரன் என்பருக்கு இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற சிறுமி லக்சாயினியை ஈ.பி.டி.பி உறுப்பினரான கந்தசாமி ஜெயதீஸ்வரன் என்ற காமுக கொலைகாரன் கடத்திச்சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்திருந்தார்.

இது தொடர்பிலான வழக்கின் இறுதி விசாரணை நேற்று யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது வழக்கு தொடுனர் சார்பில் அழைக்கப்பட்ட சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டதையடுத்து, எதிரி தனது வாக்குமூலத்தை சாட்சி கூட்டில் நின்று அளித்தார்.

அதனை தொடர்ந்து அரச சட்டத்தரணி நா.நிஷாந்த் தொகுப்புரையில் குறிப்பிடுகையில் எதிரிக்கு கொலை குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து எதிரி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் எதிரி இக் குற்றத்தை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என தனது தொகுப்புரையில் குறிபிட்டார். அதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெள்ளிகிழமை வழங்கப்பட்டது.

குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அத்துடன் 10இலட்சம் ரூபா நஷ்டஈடும், 25ஆயிரம் ரூபாய் அபராத பணமும் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக் கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபரை நெடுந்தீவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தன.

இதில் நான் கொலை செய்யவில்லை என இந் நபர் தெரிவித்த போதும் அனைத்து சாட்சியங்களும் அவருக்கு எதிராகவே காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் 5 வருடங்களுக்குப்பிறகு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமி ஜேசுதாஸ் லக்சாயினி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துல்லியமாக தடயங்களைச் சேகரித்து ஆய்வு செய்து நீதிமன்றுக்கு சமர்ப்பித்த சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் மற்றும் இந்த விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் பண்டா ஆகியோரை யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞசெழியன் பாராட்டினார்.

இவ்வழக்கில் கண் கண்ட சாட்சியங்கள் இல்லாது இருந்தாலும் சட்டவைத்திய அதிகாரி சிறுமியின் உடலைப் பரிசோதனை செய்து அச் சிறுமியின் உடலில் காணப்பட்ட பற் கடி காயங்களின் தடயங்களைப் பாதுகாத்து அதற்கான அறிக்கை பெற அனுப்பியமை, மரபணுப்பரிசோதனைக்கான நடவடிக்கை எடுத்தமை போன்றவை பாராட்டத்தக்கது என்றும் அந் நேரம் ஊர்காவற்துறையில் கடமையாற்றிய நீதவான் நள்ளிரவு வரை சம்பவ இடத்தில் இருந்து சேவையாற்றியமையும் பாராட்டத்தக்கது எனவும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்புரையின் போது தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளியான ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்று அழைக்கப்படும் கந்தசாமி ஜெயதீஸ்வரன் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்குகையில் பின்வருமாறு தெரிவித்தார்.

இச்சம்பவம் இடம்பெற்ற நாள் அன்று காலை 6 மணிக்கு இறைச்சி வாங்குவதற்காக மச்சாளின் கணவரின் இறைச்சி கடைக்கு சென்ற போது, இறைச்சி வருவதற்கு நேரமாகும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து, காலை 8 மணியளவில் இறைச்சி வந்தது. பின்னர் இறைச்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட்டு டவுன் (பஸார்) சென்று விட்டேன். நான் இறைச்சி வாங்கி வரும் போது என் பின்னால் சிறுமி (கொலை செய்யப்பட்ட சிறுமி) வருவதை கண்டேன்.

ஆனாலும், சிறுமி எங்கே சென்றாள் என்பது எனக்கு தெரியாது. மாலை வீடு திரும்பியதும், பிள்ளையார் கோவிலடி சந்தியில் ஆட்கள் கூட்டமாக இருப்பதாக என் மனைவி தெரிவித்தார்.
அங்கே சென்று பார்த்த போது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தார். சுற்றிலுமாக பொலிஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள்.

இதனையடுத்து, இரவு நானும் எனது மச்சாளின் கணவரும் வீட்டில் வைத்து மது அருந்தினோம். பின்னர் மச்சாளின் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். அவர் சென்று சிறிது நேரத்தில் ஊர் மக்கள் அவரை பிடித்து என் வீட்டுக்கு இழுத்து வந்தார்கள்.

வீட்டில் வைத்து நீ தானே அந்த பிள்ளையை கொலை செய்தாய் எனக் கூறி ஊர் மக்கள் என்னை அடித்தார்கள். பின்னர் வழி நெடுங்கிலும், அடித்து நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு இழுத்துச் சென்றார்கள்.
எனினும், பொலிஸார் என்னை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்த ஊர் மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் எனக் கூறினார்கள்.  பின்னர் என்னை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். பொலிஸார் என்னை அழைத்து சென்று நீ தானே அந்த பிள்ளையை கொலை செய்தாய் எனக் கூறி சித்திரவதை செய்தார்கள்.

தான் உடுத்தியிருந்த நீல நிற சாரம் உள்ளிட்ட ஆடைகளை கலைய செய்து வேறு ஆடைகள் கொடுத்தார்கள். பின் இரவு 1 மணியளவில் சடலம் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிடுமாறு கூறினார்கள்.
பின்னர் என்னை வாகனத்தில் ஏற்றி விட்டு, நான் பொலிஸாரிடம் கழற்றி கொடுத்த ஆடைகளை சடலத்தின் மீது போட்டு எடுத்தார்கள். இதனை என் இரண்டு கண்களாலும் பார்த்தேன்.
அன்று என்னை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தார்கள். இதனால் அந்த இடம் பதற்றமாக காணப்பட்டது. பின்னர் மாலை 3 மணியளவில் கடற்படையினரின் பாதுகாப்புடன் குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றார்கள்.

அங்கு வைத்தே என்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்கள். என் மனசாட்சிக்கு தெரிந்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என தனது வாக்கு மூலத்தை எதிரி வழங்கியிருந்தார்.
எனினும் அச்சிறுமியின் உடலில் இருந்த கடிகாயம், மற்றும் மரபணு சோதனைகள் மூலம் இக்கொலையை இந்நபரே செய்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
0000

இக்கொலை சம்பவம் தொடர்பாக 4ஆம் திகதி மார்ச் மாதம் 2012ஆம் ஆண்டு தினக்கதிர் இணையத்தளத்தில் வெளியான செய்தி.

நெடுந்தீவில் ஈ.பி.டி.பி காமுகர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!

Published on March 4, 2012-3:02 pm   ·   No Comments

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் நேற்று முன்தினம் 12வயது மாணவி லக்சனாவை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபர் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் கிருபா என்றும் அவர் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.
இந்நபர் பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் என்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர் நெடுந்தீவில் சென்று அங்கு தங்கியிருந்ததுடன் நீதிமன்ற விசாரணைகளுக்கும் சமூகமளிக்காது வந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இந்த மாணவி சந்தைக்குச் சென்றவேளை காணாமல் போய் பின்னர் மறுநாள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து மக்கள்  கொலையாளியான ஈ.பி.டி.பியைச்சேர்ந்த கிருபா என்ற நபரை மடக்கிப்பிடித்த நிலையில் பொலிஸார் சென்று அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
இதேவேளை இந்த சம்பத்தினை அடுத்து மக்கள் ஈபிடிபிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடல் போக்குவரத்துக்களை முற்றாக இடைநிறுத்தியிருக்கின்றனர். இதனால் நெடுந்தீவில் இருந்து ஏனைய தீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டிருக்கின்றதாகவும். கச்சதீவில் இருந்து நெடுந்தீவின் ஊடாகப் பயணம் செய்த பக்தர்கள் நெடுந்தீவில் இருந்து போக்குவரத்தினை மேற்கொள்ளமுடியாது நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் மிக அண்மையில் துப்பாக்கி முனையில் இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவர்களது மார்புகளை கடித்த குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தினமும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து போடுகின்றார் என்பதோடு நெடுந்தீவில் ஈ.பி.டி.பி யின் மிகச் செல்வாக்கு மிக்க நபராகவும் இவர் விளங்குகின்றார்.

குறிப்பாக அண்மையில் பிரதமர் நெடுந்தீவிற்கு சென்ற சமயம் அவரிடமிருந்து உதவிப்பணம் பெற்றார் என்பதோடு அங்குள்ள வைத்தியசாலையின் வேலை ஒன்றை ரெண்டர் எடுத்து செய்யும் அளவிற்கு ஈ.பி.டி.பி யின் செல்வாக்கு மிக்கவராகவும் உள்ளார் என்று தெரியவருகின்றது.

இதேவேளை இவரை விடுதலை செய்யும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு கடும் நெருக்குதல்களை கொடுத்து வருவதாக தெரியவருகின்றது.

கிருபா மீது நடவடிக்கை எடுக்க கோரி நெடுந்தீவு மக்கள் ஆர்பாட்டம்

நெடுந்தீவில் பாடசாலை மாணவியை கொலை செய்த ஈ.பி.டி.பி யின் உறுப்பினர் கிருபாவை விடுவிக்காது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரி நெடுந்தீவு மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மாணவியின் கொலையின் பிரதான சந்தேகநபரான இவர் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் காணப்பட்டபோதும் பொலிஸார் இவர் மீது குற்றப்பத்திரிகையை தயார் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த தயங்குகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவரை விடுவிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் இங்கு குற்றஞ்சாட்டியதோடு கிருபாவை கொலை செய்ய தங்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் கோஷம் எழுப்பினார்கள்.

குறிப்பாக பொலிஸார் அவரை பாதுகாப்பாக நெடுந்தீவிலிருந்து அனுப்பி விட்டதாக மக்கள் கூச்சலிட்ட போது அவரை பொலிஸார் தாம் கைது செய்து வைத்திருப்பதாக தெரிவித்ததோடு பொது மக்களிடம் அவரை கொண்டு சென்று காட்டினார்கள்.

இதனால் இன்றைய தினம் நெடுந்தீவுக்கான படகுச் சேவை வர்த்தக சந்தை உள்ளிட்ட சகல நடவடிக்கைகளையும் பொது மக்கள் புறக்கணித்து  கைவிட்டதோடு தமக்கு நீதி வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

இதனால் இன்றைய தினம் நெடுந்தீவில் கடும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதேவேளை இச்சம்பவம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. kirupa_01kirupa

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...