Tuesday, September 19th, 2017

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல்.

Published on April 16, 2017-2:18 pm   ·   No Comments

polanaruwaசிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பஸ்ஸில் பயணம் செய்த தமிழ் பிரயாணி மீது நேற்றிரவு 10.20மணியளவில் பொலனறுவை செவனப்பிட்டி என்ற இடத்தில் வைத்து இப்பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஸ்ஸில் இருந்த இந்த தமிழ் பிரயாணியை அடித்து, பஸ்ஸில் இருந்து கீNp இழுத்து வந்து வீதியில் போட்டு அடித்துள்ளனர். சுமார் 7 சிங்கள காடையர்கள் இத்தாக்குதலை நடத்தி;யதாக சம்பவத்தை நேரில் பார்த்த பிரயாணிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வைத்து தமிழ் பி;ரயாணிக்கும் சிங்கள காடையன் ஒருவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதற்கு பழிவாங்கும் முகமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிரயாணிகள் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவை செவனப்பிட்டி என்னும் இடத்தில் முச்சக்கரவண்டியை வீதியின் நடுவே நிறுத்தி வைத்து பஸ்ஸை மறித்த சுமார் 7 சிங்கள காடையர்கள் தமிழ் பிரயாணி மீது தாக்குதல் நடத்தினர். அந்த பஸ்ஸில் பயணம் செய்த பிரயாணிகள் 119 இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் ஓரு மணிநேரம் கழித்தே பொலிஸார் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். பொலிஸாரிடம் முச்சக்கர வண்டி இலக்கத்தை வழங்கிய போதிலும் பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.

தாக்குதலுக்கு உள்ளான தமிழ் பிரயாணி மயக்க முற்ற நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். polanaruwapolanaruwa 1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...