Thursday, January 18th, 2018

மட்டக்களப்பை நேசித்த விரிவுரையாளர் தம்பையாவின் படுகொலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம்- அங்கம் 26

Published on May 26, 2017-1:47 pm   ·   No Comments

sivaram Thurai and thambaiyahவடபகுதியை சேர்ந்த அனைவரும் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும் என கருணா தரப்பின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்கள் கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேறியதை தொடர்ந்து மட்டக்களப்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருந்தனர்.

வடபகுதியை சேர்ந்த விரிவுரையாளர்கள், வைத்தியர்கள் ஆகியோரின் வெளியேற்றம் கிழக்கு பல்கலைக்கழகம், மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றை பெரிதும் பாதித்திருந்தது. இதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக வெளியேறியவர்களை மீண்டும் வருமாறு விடுதலைப்புலிகளும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, மற்றும் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகங்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மட்டக்களப்பை விட்டு வெளியேறி தனது சொந்த இடமான வவுனியாவில் தங்கியிருந்த கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் குமாரவேல் தம்பையா மட்டக்களப்புக்கு திரும்பி ஒரு வாரகாலத்தில் மட்டக்களப்பு நகரில் உள்ள அவரின் வீட்டில் வைத்து மே 24ஆம் திகதி மாலை 4.30மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து சில நிமிடங்களில் அவரின் வீட்டிற்கு சென்ற இருவர் அவருடன் பேச வேண்டும் என அழைத்து வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொன்றனர்.

திரு.தம்பையா கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைபற்றுக் கொண்ட ஒருவர். மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மட்டக்களப்பு அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், போன்ற அமைப்புக்கள் சேர்ந்து இந்த அமைப்பை உருவாக்கினர்.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த, இராணுவ நெருக்கடி மிக்க அக்காலத்தில் இவ்வாறான ஒரு அமைப்பை உருவாக்குவது பெரும் அச்சுறுத்தலான விடயமாகும். இதன் முதலாவது கூட்டம் மட்டக்களப்பு கத்தோலிக்க கழக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்.

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்கள் என பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகத்தின் இணைப்பு செயலாளர்களாக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண்.தவராசாவும், கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலாளர் கே.தம்பையாவும் தெரிவு செய்யப்பட்டனர். sivaram Thurai and thambaiyah

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தமிழர் மறுமலர்ச்சி கழகம் வாழைச்சேனை தொடக்கம் கல்லாறு வரை கருத்தரங்குகளை நடத்தியிருந்தது.
கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்ச்சி மற்றும் கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளை நினைவு கூரும் வகையில் வருடாந்தம் செப்டம்பர் 5ஆம் திகதி நடத்தப்படும் தமிழின படுகொலை நாள் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதில் தம்பையா பெரும் பங்காற்றியவர்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்திய பல கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களில் முக்கிய பேச்சாளராக தம்பையா கலந்து கொண்டிருந்தார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்துடன் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் நெருக்கமாக இருந்தனர். எமது சங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தனர். அவர்களில் விரிவுரையாளர் கே. தம்பையா, கெனடி விஜயரத்தினம், பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் ஆகியோர் முக்கிமானவர்களாகும்.

மிகவும் கலகலப்பாக பழகும் தம்பையா மட்டக்களப்பை சேர்ந்த கண்ணம்மா என்ற ஆசிரியையே திருமணம் முடித்திருந்தார். அவர் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் மட்டக்களப்பை மிகவும் நேசித்தார். மட்டக்களப்பின் சமூக பொருளாதார, அரசியல் அபிவிருத்தியில் அக்கறையோடு செயற்பட்டார்.  சம்பவ தினம் மாலை 5.30மணியளவில் எமது சக ஊடகவியலாளர் சண்.தவராசாவே தம்பையா இறந்த செய்தியை சொன்னார்.

மறுநாள் செவ்வாய்கிழமை காலை நானும், நடேசனும், தவராசாவும் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள தம்பையாவின் வீட்டிற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். தம்பையா எமது தனிப்பட்ட நண்பர் என்பதற்கு அப்பால் அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக செயற்பட்ட ஒருவர். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம்.

எங்கள் எல்லோர் மனத்திலும் அச்சம் மேலோங்கியிருந்தது. கருணாவும் சகாக்களும் வெளியேறிய போது மட்டக்களப்பில் மீண்டும் அமைதி திரும்பும் என நம்பிய எமக்கு தம்பையாவின் கொலை பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்தது.

தம்பையாவை யார் சுட்டார்கள்? மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இராணுவ முகாம்களில் இருந்த கருணாகுழுவை சேர்ந்த பிள்ளையான் போன்றவர்கள் இக்கொலையை செய்தார்களா? அல்லது இராணுவ புலனாய்வு பிரிவினர் செய்தனரா? அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் செய்தனரா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது.  கருணா தரப்பை சேர்ந்த பிள்ளையான் குழுவே இக்கொலையை செய்ததாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

தம்பையாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரின் வீட்டிற்கு முன்னால் மரநிழலில் போடப்பட்டிருந்த கதிரையில் மூவரும் அமர்ந்திருந்தோம். சிறிது நேர அமைதிக்கு பின் அடுத்தது ஒரு பத்திரிகையாளரைத்தான் போடுவார்கள் என நடேசன் சொன்னான். எனக்கும் தவராசாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் ஆகியோரை கொல்வதன் மூலம் தமது இலக்கை அடையலாம் என சிலர் நினைக்கிறார்கள். தம்பையாவின் கொலையுடன் இது முடியப்போவதில்லை, நாங்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும் என நடேசன் சொன்னான்.

நடேசன் தனது சொந்த பாதுகாப்பில் மிகவும் அவதானம் செலுத்துபவர். ஒரு பாதையால் சென்றால் அதேபாதையால் திரும்பி செல்ல மாட்டார். வீட்டிற்கு சென்று யாராவது அழைத்தால் கூட உடனடியாக வெளியில் வரமாட்டார். யார் வெளியில் நிற்கிறார்கள் என பார்த்து விட்டே வெளியில் வருவார்.

கருணா பிளவின் பின்னர் மட்டக்களப்பிலிருந்து வடபகுதியை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட போது நடேசன் மட்டக்களப்பை விட்டு வெளியேறாதா போதிலும் இடமாற்றம் பெற்று மட்டக்களப்பை விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். மூத்தமகனுக்கு யாழ்ப்பாணத்தில் வங்கியில் வேலை கிடைத்து விட்டது. நானும் இடமாற்றம் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் செல்லப்போகிறேன் என நடேசன் எங்களிடம் கூறியிருந்தார்.

தம்பையாவின் இறுதிச்சடங்குகளை அவரின் சொந்த ஊரான வவுனியா ஆசிக்குளத்தில் நடத்தவே அவரின் மனைவியும் குடும்பத்தினரும் விரும்பினர். மட்டக்களப்பில் அவரின் இறுதிச்சடங்கினை நடத்தலாமே என கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அவரின் நண்பர்கள் கூறிய போது அதனை அவரின் மனைவி மறுத்திருந்தார்.

தம்பையா இங்கு இருக்க கூடாது என்றுதானே சுட்டுவிட்டார்கள். பின்னர் எதற்காக இங்கு இறுதிச்சடங்கினை நடத்த வேண்டும் என அவரின் மனைவி தெரிவித்திருந்தார்.

தம்;பையாவின் பூதவுடல் அவர் பணியாற்றிய கிழக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அவரின் சொந்த ஊரான வவுனியா ஆசிக்குளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

வவுனியா ஆசிக்குளத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ஞானவேல், விடுதலைப்புலிகளின் வவுனியா மகளிர் அரசியல் பொறுப்பாளர் அலை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், வினோ நோகராதலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தம்பையாவின் உடலுக்கு செவ்வாய்கிழமை அஞ்சலி செலுத்தி விட்டு மறுநாள் காலை புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்று விட்டேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்புக்கு திரும்பியிருந்தேன். இரவு 10மணியளவில் நடேசன் எனது வீட்டிற்கு தொலைபேசி எடுத்தான். இன்று ஞாயிற்றுக்கிழமை வீரகேசரி பார்த்தாயா என கேட்டான். வாராவாரம் வீரகேசரி வார இதழில் நடேசனின் அரசியல் கட்டுரை வருவது வழக்கமாகும்.   நடேசன், சிவராம் ஆகிய இருவரின் அரசியல் கட்டுரைக்காகவே வீரகேசரி ஞாயிறு வார மலரை பலரும் வாங்குவர்.
மே 30ஆம் திகதி வெளிவந்த ஞாயிறு வார இதழில் நடேசன் எழுதிய கட்டுரை முழுப்பக்கத்தில் வெளியாகியிருந்தது

சுட்டுக்கொல்லப்பட்ட விரிவுரையாளர் தம்பையாவின் இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்ட படத்துடன் அக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்து.

மட்டக்களப்பில் இடம்பெறும் படுகொலைகள் அராஜகங்கள் பற்றி குறிப்பிட்டு இதனை மட்டக்களப்பு சமூகம் பொறுத்துக்கொண்டிருக்கப்போகிறதா என குறிப்பிட்டிருந்த நடேசன், இந்த சமூகத்திற்கு எந்த அநீதியும் நினைக்காத தம்பையா நோக்கி பாய்ந்திருக்கும் துப்பாக்கி ஓய்ந்து விடப்போவதில்லை, தம்பையாவுக்கு அடுத்தது யார் என்ற கேள்வியுடன் அந்த கட்டுரையை முடித்திருந்தார்.

தம்பையாவுக்கு அடுத்ததாக ஒரு பத்திரிகையாளரைத்தான் சுடப்போகிறார்கள் என நடேசன் அச்சம் கொண்டிருந்தான், நடேசன் அச்சம் கொண்டிருந்தது போலவே மறுநாள் அச்சம்பவம் நடைபெற்றது. ( தொடரும் )

( இரா.துரைரத்தினம் )T.jeyasingamThambiah 1Thambiah

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...