Thursday, October 19th, 2017

கடல்நீரை நன்னீராக்கும் சர்ச்சையான திட்டம் பற்றி கலாநிதி எஸ்.சிவகுமார் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி VIDEO

Published on May 28, 2017-10:41 pm   ·   No Comments

sivakumarஆண்டவன் தந்த தண்ணீரை சரியாக முகாமைத்துவம் செய்யாது கடலில் கலக்க விட்டுவிட்டு கடல்நீரை எடுத்து நன்னீராக்க முற்படுகிறார்கள், வடமாகாணத்தில் இருக்கும் 23 ஆறுகளிலிருந்து வெளியேறும் தண்ணீரை சேமித்தாலே வடமாகாணத்திற்கான குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என யாழ். பல்கலைக்கழக குடிசார் பொறியியல் பீடத் தலைவர் கலாநிதி எஸ்.சிவகுமார் தினக்கதிர் இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

இரணைமடு குள நீரை யாழ். குடிநீருக்கு கொண்டு செல்வதை தடுப்பதன் பின்னணியில் விவசாயிகள் இருக்கிறார்கள் என கூறமுடியாது. சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே இதற்கு தடையாக இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விடயத்தில் வடமாகாணசபை கூட தவறான பாதையில் செல்வதாகவும். இரணைமடு குள நீரை குடிநீருக்காக பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக 9பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக்குழு தங்களின் எண்ணத்திற்கு ஏற்ப அறிக்கையை தராது என எண்ணிய வடமாகாணசபை தங்களுக்கு சார்பான 6பேரை புதிதாக அக்குழுவில் நியமித்து அக்குழுவின் தீர்மானத்தை மாற்றியமைத்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வடமராட்சி கிழக்கில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் அப்பிரதேச சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் அவர் மறுக்கவில்லை. கழிவுகளை சரியான முறையில் அகற்றவில்லை என்றால் அப்பிரதேச குடிநீர் கிணறுகள் உட்பட சூழல் பாதிக்கப்படும் என்றும் மீன் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

10எம்.சி அளவான குடிநீரை பெறுவதற்கு 25எம்.சி அளவான கடல்நீரை எடுக்க வேண்டும். அதில் 15எம்.சி அளவான உப்பு செறிவுள்ள கழிவான நீரை மீண்டும் கடலுக்குள் விட்டால் அப்பிரதேச கடல் வளம் பாதிக்கப்படும் என்றும் அதனை தரையில் கொட்டினால் அப்பிரதேச குடிநீர் கிணறுகளும் சூழலும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்களை இயக்குவதற்காக பயன்படுத்தப்படும் டீசல் கழிவுகளை அகற்றுவதற்கான சரியான திட்டங்களும் கிடையாது. சுன்னாகத்தில் கழிவு ஒயில் நிலத்தடி நீரில் கலந்தது போன்ற அபாயம் வடமராட்சி கிழக்கிலும் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இத்திட்டம் பற்றி நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கூட நம்பத்தன்மை வாய்ந்ததில்லை. தங்களின் எண்ணத்திற்கு இசைந்து செல்லக் கூடியவர்களை நிபுணர் குழுவில் நியமித்து தமக்கு சாதகமான அறிக்கையை பெறுவதற்கே முற்படுகிறார்கள்.

இரணைமடு குள நீரிலும் வடமராட்சி கிழக்கில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திலும் அரசியல் கலந்திருக்கிறது. இரணைமடு குள நீரை யாழ்.குடாநாட்டிற்கு கொண்டு செல்வதை அரசியல்வாதிகள் தடுத்தார்கள். சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் வடமராட்சி கிழக்கை பிரதிநிதித்துவப்படும் அரசியல்வாதிகளால் ஏன் தடுக்க முடியாமல் இருக்கிறது.

வடமராட்சி கிழக்கு இந்த ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமாக இருந்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசியல் தலைமைகளை தவிர்த்து அப்பிரதேசத்திலிருந்து கீழ் மட்டத்திலிருந்து அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும். அப்பிரதேச மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கலாநிதி சிவகுமார் தினக்கதிர் இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியின் முழு காணொளி வடிவத்தையும் இங்கே காணலாம். ( இரா.துரைரத்தினம் )


sivakumar

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...