Monday, June 26th, 2017

பௌத்தமயமாக்கப்படும் தமிழரின் அடையாளங்கள்- தர்சினி நித்தியானந்தன்.

Published on May 28, 2017-11:23 pm   ·   No Comments

Nagadeepaயாழ்ப்பாணம் என்றவுடன் நினைவு வருவது எல்லாம்;; தமிழர்களின் அடையாளம், கலாச்சாரம், விழுமியம் ஏன் இதனை விட தமிழ் என்றே சுருக்கமாக கூறலாம். ஆனால் இன்று தமிழர்களின் பாரம்பரியங்கள் சிறிது சிறிதாக களையப்படுகின்றன. எம் தாயின் ஆடைகளை களைந்து கொண்டிருக்கின்றனர். திரௌபதியின் மானம் கண்ணனால் காப்பாற்றப்பட்டது. தமிழ் இனத்தை காப்பாற்றுபவர் யாரோ?

யாழ்ப்பாணத்துக்கு என்றே அடையாளமாக கூறப்பட்ட சிறப்பிடங்கள் அனைத்தும் அதனுடைய வரலாறு அடையாளம் அனைத்தும் களையப்பட்டு சிங்களபௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றது. நயினை நாகபூசணி அம்மனை எடுத்துக்கொண்டால் கடவுளான அம்மன் சாதாரண மனிதனாக இருந்திருந்தால் அம்மனை கூட மனமாற்றி பௌத்தத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அம்மனை வழிபடச் சென்ற இடத்தில் தமிழர்களுக்கு இல்லாத உரிமைகள் சிங்கள ஜாம்பவான்களான கடற்படையினருக்கு. எது சரி பிழை என்பதற்கு அப்பால் தமிழர்களின் இடத்திலே தமிழர்களை வழி நடத்த ஒரு தமிழன் கூடவா இல்லை என்பதனை நினைக்கும் போது கவலை அதிகரிக்கின்றது.

சிங்கள மொழியில் கட்டளைகளை இடும்போது தமிழர்கள் மொழி தெரியாமல் தவிக்கின்றனர். மனம் வெதும்புகின்றனர். அவ் சிங்கள யாம்பவான்கள், அடியார்கள் கட்டுப்பவில்லை என அதிகாரத்தொனியில் மேலும் உறுக்குகின்றனர். கடவுளிடம் வரம் வாங்குவார்களா! இல்லையா? கண்டிப்பாக பேச்சு வாங்குவது உறுதி. இது சரியா தவறா? ஏன்பதற்கு அப்பால் இரு மொழிப் பிரயோகம் அவசியம் என்பதையே உணர்த்துகின்றேன்.

அது மட்டுமில்லாமல் நயினைதீவு என்னும் இடமானது நாகதீபமாக சிறிது சிறிதாக மாறி வருகின்றது. நயினாதீவில் உள்ள பௌத்த விகாரையின் எல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

ஆலமரத்தில் தனியாக இருந்த புத்தர் இன்று பெரிய கட்டிடங்களுக்கு தலைவனாக உள்ளார். புத்தரும் கடவுள் தான். ஆனால் புத்தரின் பெயரால் செய்யப்படும் அநீதிகள் அதிகம். நயினாதீவில் புத்தர் போரில் ஈடுபட்ட மன்னர்களை சமரசம் செய்து சமாதானப்படுத்தி விட்டதாக சான்று உள்ளது என நிறுவியுள்ளனர். ஆனால் அதனை உறுதி செய்வது தொல்லியலாளர்களின் கடமை. அது மட்டுமல்லாமல் கடலில் பல அடிகளில் புதிதாக புத்தர் சிலை அமைப்பதற்கான வேலைகள் இடம்பெற்றும் கொண்டிருக்கின்றன.

இதனை சில தமிழ் உணர்வாளர்கள் பின்வருமாறு விமர்சிக்கின்றனர் ‘கடலில் இருந்து பார்க்கும்போது அம்மனின் கோபுரமே தெரிகின்றது பௌத்தத்துக்கான அடையாளம் என்பது காணப்படவில்லை. எனவே அத் துறையை நிவர்த்தி செய்வதற்காக புத்தர் சிலையை அமைக்கின்றனர். இது இனமையவாத அரசியலாக தென்படுகின்றது என்கின்றனர். இக் கருத்தினை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகவே இருக்கின்றது. காரணம் பௌத்த சிங்கள மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு இடத்தில் ஒரு இந்துக் கடவுளுக்கு பெரிய ஆலயம் அமைக்கப்பட்டால் அவ்விடத்து மக்கள் அனுமதிப்பார்களா? அல்லது அரசியல் கட்டமைப்புத்தான் இதனை விட்டு வைக்குமா? நிச்சயமாக இல்லை. இருப்பதற்கான சாத்தியம் கூட இல்லை.

காரணம் சிங்கள மக்கள் இருந்த இடத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு நடந்த உண்மைகளை யாவரும் அறிவர்.
இவ் பௌத்தமயமாக்கல் என்பது தனியே நயினாதீவில் மட்டும் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் அனைத்து இடங்களிலும் குறிப்பாக மாதகல், கந்தரோடை, ஆரியகுளம் போன்ற இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. கந்தரோடை விகாரையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. இப் பூமியானது தமிழர்களுக்கு தமிழ் வணிகர்களுக்கு உரியதாக இருந்தது. சிறிது காலமே பௌத்த பிக்குகள் வாழ்ந்து இருந்துள்ளனர். ஆனால் இவ் உண்மைகளை மறைத்து அப் பூமியினை சுற்றியுள்ள மக்கள் ஆக்கிரமிப்பு செய்வதனால் தாங்கள் பாதுகாப்புக்கு உள்ளதாக அங்கு இருக்கும் படையினரால் வரும் சிங்கள மக்களுக்கு கூறுகின்றனர். இதனை எப்படி எவ்வாறு அணுகுவது என்பதே தெரியவில்லை. வரும் சிங்கள மக்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள். அவர்களும் சாதாரண மனிதர்களே! ஆனால் அவர்களின் மனதில் இனவாதம் திணிக்கப்படுகின்றது.

தமிழ் பூமியின் அடையாளங்களை, வரலாறுகளை அவர்கள் ஆழமாக அறிய கல்வியலாளர்கள் அல்ல. அதனைப் புரிந்து கொண்டு ஆய்வு செய்வதற்கு அவர்களுக்கு அவசியம் கூட இல்லை. காரணம் அவர்கள் ஆய்வாளர்கள் அல்ல, வெறும் சுற்றுலாப் பயணிகளே. எனவே இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். இதனை சந்ததி சந்ததியாக வழி கடத்தப்படுகின்ற போது இனவாதம் என்பது வலுவடைவதற்கான தன்மை அதிகரிக்கின்றதுடன் ஆழமாக்கப்படுகின்றது. மேலும் கந்தரோடை விகாரையினை நோக்கும் போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் அனைத்து இட புத்தர் கோவில்களும் நவீனமயப்பட்டுள்ளது, ஏன் புதிதாக புத்தர் சிலைகளும் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன. ஏன் கந்தரோடையில் உள்ள புத்தர் சிலை மட்டும் இன்னும் புணர்நிர்மானம் செய்யப்படவில்லை இதற்கான காரணம் என்ன? என்பதை இனம்காணவேண்டி உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஆரிய குளத்தில் உள்ள புத்த விகாரையில் கூட தவறான வழியில் சிங்கள மக்களை வழிநடத்துகின்றனர். இன வாதத்தை தூண்டும் செயலில்; ஈடுபடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க விடயமாக உள்ளது.

மாதகலில் உள்ள சங்கமித்தை வந்து இறங்கியது என பௌத்த மதத்தினை அடிப்படையாக கொண்டு எல்லை வகுக்கப்பட்டுள்ளது. இவ் வரலாற்று இடத்தினை பாதுகாக்கப்பட வேண்டியது கடமைதான். ஆனால் சுயத்தை விடுத்து பாதுகாத்தல் என்பது தவறு. இவ் இடத்திலே இன்னொரு மனக்கவலை இவ் இடம் தொடர்பான வரலாற்றினை தமிழில் பிழை பிழையாக எழுதியுள்ளனர். அவ் வரலாறு கூட பற்றைக்குள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மேற்பார்வை செய்யும் அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை இனம்காண முடியவில்லை. அது மட்டுமில்லாமல் புத்தர் அழகாக பெரிய இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதேவேளை ஏன் சிவனை மட்டும் பற்றைக்குள் யாரும் தேடுவார் அற்று உள்ளார். ஏன் சிவனை பாதுகாக்கவில்லை இவ் குறிப்பிட்ட இடங்களைத்தவிர ஏனைய இடங்களும் உதாரணமாகவுள்ளன. இன்றைய காலத்தில் கானும் இடங்களில் எல்லாம் புத்த பெருமானை வலுக்கட்டாயமாக அமர்த்தி வருகின்றனர். முன்பு சிறிதாக புத்தர்சிலை வைத்த இடங்கள் எல்லாம் இன்று பெரும் விகாரைகளாக மாறியுள்ளன. இதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டியது என்பது காலத்தின் கட்டாயம்.

இவற்றை எல்லாம் தொகுத்து பார்க்கும்போது பல்வேறு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக ஏன் திட்டமிடப்பட்ட அடிப்படையில் தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டும். சிங்களப்பிரதேசத்தில் திட்டமிடப்பட முடியாத இந்துமயமாக்கம் ஏன் தமிழர்களின் புனித இடத்தில் இடம்பெற வேண்டும். இலங்கை பௌத்த சிங்கள தேசம் என்பதினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காகவா? யாழ்ப்பாணத்தில் விகாரைகள் அமைக்கும்போது அதனை பாதுகாத்து வழிபடுவதற்கென சிங்கள மக்கள் குடியேற்றங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

அடுத்ததாக யாழப்பாணப்பிரதேசத்திலே தமிழ் அடையாளங்களைப் பாதுகாக்கவென பல வரலாற்று இடங்கள் உள்ளன. உதாரணமாக சங்கிலியன் கோட்டைஇ ஜமுனா ஏரி கீரிமலை ஆலயத்தின் பழைய கட்டிடங்கள் பாரம்பரிய குளங்கள் என பல தன்மைகள் உள்ளன. ஏன் இவைகள் பாதுகாக்கப்படவில்லை. இதற்கான பொறுப்பு என்பது யாரிடம் உள்ளது. தமிழர் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகளை பாதுகாக்காமல் விடப்படுகின்ற போது எமது பாரம்பரிய அடையாளங்கள் என்பது அழிவடைந்து தமிழர்கள் வந்தேறு குடிகள்தான் என்பதினை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கும்.

அடுத்ததாக பழைமையான இடங்களை பார்வையிடுவதற்கென அனைத்து இடங்களிலும் இருந்து மக்கள் வருகின்றனர். பல்வேறு மொழி பேசுபவர்களாக இருக்கலாம் பல மதங்களை பின்பற்றுபவராக இருக்கலாம் எனவே ஒரு இடத்தினை அதன் வரலாற்றினை அறிந்து கொள்ள வேண்டும் என வரும் மக்களை இங்கு வழிகாட்டுபவர்கள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்தல் வேண்டும் என்பது அவசியம் . ஆனால் அனைத்து பௌத்த விகாரை இடங்களிலும் சிங்கள மொழி பேசும் வழிகாட்டுனர்களே உள்ளனர். தமிழ் மக்களினை மதித்து அவர்களும் அதன் வரலாற்றினை அறிந்து கொள்ள ஒரு தமிழர் கூட இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இதில் இன்னொரு தன்மையினை இனம்காண வேண்டி உள்ளது. அவர்கள் கூறும் கதைகள் அனைத்துமே சிங்கள பௌத்தத்தையே முதன்மையாக கொண்டமையால் சில இடங்களில் தமிழர்களை குறை கூறுவதால் என்னமோ அவர்களிடம் இருந்து தமிழ்மொழி மூலமான வழிகாட்டலை பெறமுடியவில்லை. இது தமிழர் இடத்திலே உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

அடுத்ததாக நோக்கும் போது யாழ்ப்பாணத்தில் புனர் நிர்மானம் செய்யப்படும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக புதிதாக கடற்கரையிலே கட்டப்படும் உல்லாச விடுதிகள், மீள் குடியேற்றத்துக்கென நிர்மானிக்கப்படும் தொடர் குடியிருப்பு வீடுகள் எல்லாமே சிங்கள இராணுவத்தால் அமைக்கப்படுகின்றன. ஏன் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் இல்லையா? சிங்கள இராணுவத்தை வேலைக்கமர்த்தும் யாழப்பாணத்தில் பல இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர். இவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை கவனிப்பவர் யாரோ? யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வேண்டப்படாத சம்பவங்கள் அனைத்துமே வேலை இல்லாததே அடிப்படைக்காரணம். இதனை யாரும் இனம்காணவில்லை. இல்லை இனம்காண தவறிவிட்டனரா? யாழ்ப்பாணத்தில் குற்றங்கள், குறைகள் இடம்பெறுகின்ற எனக் குறை கூறுவதற்கு வருபவர்கள் அக் குற்றத்திற்கான காரணம் என்ன என்பதினை மறைத்து விட்டார்களா? மறந்து விட்டார்களா? சொந்த பூமியிலே வேலையற்று திரியும் இளைஞர் யுவதிகள் ஏனைய நாட்டினை நோக்கி நகர வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இதன் காரணமாக குடும்பத்தின் இடைவினை குறைகின்றது. சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. தனிமைப்படுகின்றனர். உள பாதிப்புக்குள்ளாகின்றனர். இவர்களை யார் கவனிப்பது ? எல்லா இளைஞர் யுவதிகளும் கவலைகளை மறந்து சந்தோசமாக வாழவில்லை. கவலைகளை மறைத்து வாழ்கின்றனர். இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. அரேபிய நாடுகளில் வாழ்பவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் அதேவேளை உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர். மூளைசாலிகளின் வெளியேற்றத்தை கண்டிக்கும் நபர்கள் ஏன் இவர்களின் வெளியேற்றத்தை கண்டிக்கவில்லை. இவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யவில்லை . காரணம் அந்நிய செலாவணிக்கான கருவிகள் அவர்கள். அவர்களை உணர்வுள்ள மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை. பணத்துக்கான ஜடப்பொருளாகவே பார்க்கப்படுகின்றனர். இதற்கு காரணம் யார்?.

இங்கு இக் கட்டுரையானது சிங்கள மக்களை குறை கூறுவதாக இல்லை. அவர்களும் தமிழ் மக்களைப் போல உணர்வுள்ளவர்கள்;. அவர்களை தவறான வகையில் வழிநடத்துகின்றனர். சாதாரண மக்கள் கூட இனவாத உணர்வுகளுள் தூண்டப்படுகின்றனர். கல்வி கற்ற மக்களிடையே வரலாறு தொடர்பான ஆய்வு என்பது காணப்படும். அது அவர்களை உண்மையாக வழி நடத்தும். ஆனால் சாதாரண மக்களிடையே சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் காணப்படும். எனவே அம் மக்கள் தமிழர்களை ஒரு முற்சாய்வான எண்ணத்துடன் கண்ணோட்டத்துடன் நோக்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இது இரு மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விடுகின்றது.

அது மட்டுமல்லாமல் எங்களுடைய பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். உரிமைகளை தனியே எடுத்து அரசாங்கத்துடன் தர்க்கிக்கப்படுவதற்கான தன்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு. ஆனால் இவ்வளவு அநீதிகள் நடைபெறுகின்ற போது ஏன் இவர்கள் மௌனம் காக்கின்றனர். ஏன் தங்களின் அடையாளங்களை பாதுகாக்க முன்வரவில்லை. சாதாரண மக்களின் பேச்சுக்கள் அரசாங்கததிற்கு எடுபடாது என்பது யாவரும் அறிந்த உண்மை. எனவே மக்கள் பிரதிநிதிகள் இதனை உணர்ந்துஇ அரச உத்தியோகத்தில் உள்ளவர்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. மக்களின் அபிலாசைகளை காக்க வேண்டிய பிரதிநிதிகளே தங்களது கடமைகளை மறந்து விட்டார்களா? அல்லது மறைத்து விட்டார்களா?

இந்நிலை தொடருமாக இருந்தால் சிறிது காலத்திலே யாழ்ப்பாணம் என்பது தமிழின் அடையாளம் அழிக்கப்பட்டு புதிய ஒரு பௌத்த நகரமாக பிறப்பிக்கப்படும். இனி வரும் சந்ததியினருக்கு எங்களுடைய வரலாறு என்பது கிடைக்கப்பெறாத ஒன்றாக இருக்கும். தங்களது மூதாதையர்கள் வந்தேறு குடிகள் என்பதினை இலகுவில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படலாம். இது நடக்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் தமிழ் உணர்வு மிக்கவர்களால் மேற்கொள்ளப்படலாம். மீண்டும் ஒரு முறை யுத்த பூமியாக மாற்றியமைக்கப்படலாம். ஆனாலும் இதற்கான சாத்தியப்பாடு என்பது அரிதாகவே உள்ளது. காரணம் இன்றைய கால மனிதர்கள் தொழில்நுட்பத்துக்கு அடிமையான சுயநலம் மிக்க குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற தங்களின் தேவையை மட்டுமே இனம் கண்டு தீர்ப்பவர்களாக உள்ளனர். இவர்கள் பொது நலனை தீரப்பதற்கான தன்மை நிலை அற்றவராகவே உள்ளனர். எனவே ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியப்பாடு குறைந்ததாகவே உள்ளது. அனைவருமே சுயநலமானவர்கள் என்பதை கூற வரவில்லை. பெரும்பான்மையானவர்கள் அவ்வாறானவர்களே!

எனவே இனியாவது அரசியல் தலமைத்துவத்தில் இருப்பவர்கள் நிர்வாக தலமைத்துவத்தில் இருப்பவர்கள் இதன் அரசியல் தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். எஞ்சி இருக்கும் எமது அடையாளங்களை இனியாவது பாதுகாக்க வேண்டும். எம் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். எம் சந்ததிகளைப் பாதுகாக்க வேண்டும்.

(Tharshini Nithiyanantham,   department of sociology, university of jaffna )Nagadeepa

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...