Monday, June 26th, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு 38 மாட்டு தலைகளுடன் இறைச்சி கடத்தல் .

Published on June 4, 2017-6:27 am   ·   No Comments
cow05யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி கூலர்  வாகனம் ஒன்றில் 38 மாடுகளின் தலையுடன் சுமார் ஆயிரம் கிலோக்கு அதிகமான  இறைச்சியை சட்டவிரோதமாக   கடத்திச் சென்ற இருவரை   இரண்டு இலட்சம் ரூபா தலா இரண்டு ஆள் பிணையில்  செல்ல கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி  முழங்காவில் பொலிசாருக்கு   வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி பூநகரி மன்னார் ஊடாக புத்தளத்திற்கு கூலர் ரக வாகனத்தில் வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின்  தலைகளுடன்  இறைச்சிகள்  கொண்டு செல்லப்பட்டுவதாக   கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம்  நிறுத்தப்பட்டு   சோதனையிடப்பட்டது.
இதன் போது புத்தளம் மாவட்டத்தை  சேர்ந்த    இரண்டு சந்தேக நபர்கள்  சோதனையிடப்பட்ட வாகனத்தில்  சுமார் ஆயிரம் கிலோக்கு அதிகமான  மாட்டு   இறைச்சி மற்றும் 38 மாட்டு தலைகளுடன்    கைது செய்யப்பட்டுள்ளனர்.   பின்னர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களும் சான்றுப் பொருட்களும்   இன்று (3) சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் வாகனத்தில்   சட்டவிரோதமாக குறித்த இறைச்சிகளை   கடத்திச் சென்ற இருவரை   இரண்டு இலட்சம் ரூபா தலா இரண்டு ஆள் பிணையில்  செல்ல கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன்     திருடப்பட்டு வெட்டப்பட்ட  1800 கிலோவுக்கு மேற்பட்ட இறைச்சி மற்றும்   38 மாட்டு தலைகள்   நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன.
இதன் போது  கரைச்சி பிரதேச சபையினர் தங்களது கனரக வாகனத்தின் மூலம் பணியாளர்களையும் கொண்டு பாரியளவில் குழியினை தோண்டி அவற்றை புதைத்தனர்.
மேலும்   மாடுகள் கொள்வனவு செய்யதமைக்கோ இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கோ அல்லது கொண்டு செல்லப்படுவதற்கோ என எவ்விதமான சட்டரீதியான  ஆவணங்களும் இவர்களிடம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

(பாறுக் ஷிஹான்)cow01cow08cow05

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...