Thursday, October 19th, 2017

யாழ்ப்பாணத்தில் மோசடி செய்த இருவருக்கு செருப்பு மாலை போட்டு நையப்புடைத்த மக்கள்.

Published on June 5, 2017-8:42 am   ·   No Comments

image-0-02-06-1a50836b48aa38b5e51f79ab9ed193d1b90fc2b2b93bf5147827306baee57715-Vயாழ். மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ். நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

“அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன், சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பணத்தை இழந்த பலர் அண்மையில் ஒன்று கூடி மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவத்தை சேர்ந்தவர்களை யாழ். நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக வியோகஸ்த்தர் உரிமம் பெறுவதுபோல் பாவனை செய்து மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

 குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு 1 மணி நேரத்தின் பின்னதாகவே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை நடத்தி மேற்படி நிறுவனத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 2011ம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையும் வைத்திருக்கின்றனர். அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மட்டும் அண்ணளவாக சுமார் 3 தொடக்கம் 4 N காடி ரூபாய் பணத்தை மேற்படி தண்ணீர் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். image-0-02-06-919a89d6263dd10eac7e1df82fe604429d33f2ba92ce75f3c21e4ea9533c1678-Vimage-0-02-06-71a300e7c0382ab8284a4f8f1329de89deb2c8782d352f1f7b4e7dccae7d895c-Vimage-0-02-06-1a50836b48aa38b5e51f79ab9ed193d1b90fc2b2b93bf5147827306baee57715-V

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...