Thursday, October 19th, 2017

முள்ளிக்குளம் மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை வழங்கினர்.

Published on June 5, 2017-2:13 pm   ·   No Comments

mullikulamமுள்ளிக்குளம் மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும், மத தலைவர்களும், கடற்படையினரும் இணைந்து பொய் வாக்குறுதிகளையே வழங்கினார்கள். என முள்ளிக்குளம் மக்கள் கூறியுள்ளனர்.
முள்ளிக்குளம் மக்களுக்கு கடந்த சித்திரை மாதம் 29ம் திகதி வாக்குறுதி வழங்கப்பட்டபோதும், கடந்த 35 நாட்களுக்கு மேலாக மக்கள் சொந்த நிலத்திற்கு செல்ல இயலாமல் வீதியில் கிடப்பதாகவும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்ள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிக்குளம் மக்கள் சார்பில் முள்ளிக்குளத்தை சேர்ந்த அந்தோனி லம்பட் மற்றும் அந்தோனி குறூஸ் என்ற இருவர் யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அந்தோனி லம்பட் கூறுகையில்,
2007ம் ஆண்டு முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து படையினரால் வெளியேற்றப்பட்டோம். அன்று தொடக்கம் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் வாழ்ந்து வருகின்றோம். இதற்கிடையில் பல போராட்டங்களை நடத்தியதுடன் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கும் எமது பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த பங்குனி மாதம் 23ம் திகதி முள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் இணைந்து ஒரு போராட்டத்தை ஒழுங்கமைத்து தொடர்ச்சியாக சித்திரை மாதம் 29ம் திகதி வரை நடத்தியிருந்தனர். இந்நிலையில் 29ம் திகதி 38வது நாள் போராட்டத்தின்போது கடற்படை தளபதி மற்றும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள், கிறிஸ்த்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டு கடற்படையினரின் வசம் உள்ள காணிகள் 3 நாட்களுக்குள் மக்களிடம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அது வரையில் முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத்தில் எம்மை தங்கிpயிருக்குமாறும் கேட்டு கொண்டனர். ஆனால் வாக்குறுதி வழங்கிய படி எதுவுமே நடக்கவில்லை. சித்திரை மாதம் 29ம் திகதி தொடக்கம் 35 நாட்களுக்கு மேலாக முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத்திலேயே மக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் மத தலைவர்களும் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். என்றார்.

தொடர்ந்து அந்தோனி குறூஸ் கூறுகையில், முள்ளிக்குளத்திற்குள் சுமார் 8 வரை யான குளங்கள் உள்ளது. அதேபோல் முடக்காம ஆறு என்ற ஆறும் உள்ளது. அவையும் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் கஸ்டப்படுகின்றார்கள். குறிப்பாக முள்ளிக்குளம் மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கூட வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ் கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ மற்றும் கத்தோலிக்க மத தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆகியோர் முள்ளிக்குளம் மக்களை சந்தித்து 3 மாதங்கள் கால அவகாசம் கேட்டிருந்தனர். அதனோடு கர்தினால் மல்கம் ரஞ்சித்த தன்னை நம்புங்கள் என முள்ளிக்குளம் மக்களிடம் கேட்டிருந்தார். ஆனால் அவர் பின்னர் முள்ளிக்குளம் மக்களை பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டார். அவ்வாறான ஒரு செயலையே மன்னார் மறைமாவட்டமும் செய்கிறதா? என எண்ண தோன்றுகின்றது. இதேவேளை கடந்த சித்திரை மாதம் 29ம் திகதி மக்கள் போராட்டத்தை கைவிட்டபோது கடற்படையினரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத தலைவர்களும் இணைந்து முள்ளிக்குளம் மக்களை கடற்படை முகாமுக்குள் அழைத்து சென்று பேசியிருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை ஆங்கிலத்தில் நடைபெற்றுள்ளது. எனவே மக்களுக்கும் அந்த விடயம் தெரியாது எனவே மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்திற்குள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை நடத்தும் மனோநிலையில் மக்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.


mullikulam

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...