Thursday, August 17th, 2017

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 35ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.

Published on June 6, 2017-10:58 am   ·   No Comments

UN Genevaஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 35ஆவது கூட்டத்தொடர் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியது. இம்மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இரு வாரங்களுக்கு இக்கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தொடரின் பிரதான நிகழ்ச்சி நி;ரலில் இலங்கை விடயம் சேர்க்கப்படவில்லை எனினும் இடப்பெயர்வு, பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், சித்திரவதைகள், தொடர்பாக பேசப்படும் போது இலங்கை விடயங்களும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர பக்க அறைகளில் இரு வாரங்களில் 10க்கு மேற்பட்ட கூட்டங்களை நடத்த தமிழ் அமைப்புக்கள் முன்பதிவுகளை செய்துள்ளன.   சரத் வீரசேகரவின் சிங்கள அமைப்பு, மற்றும் புத்தபிக்குகளின் அமைப்புக்களும் கூட்டங்களை நடத்த முன்பதிவுகளை செய்துள்ளன. எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3மணி தொடக்கம் 5மணிவரை இந்த இரு அமைப்புக்களும் 11ஆம் இலக்க அறையில் கூட்டங்களை நடத்த உள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இலங்கையின் மனித உரிமை முன்னேற்றங்கள் தொடர்பான யு.பி.ஆர். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். கடந்த 34ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிக்கப்பட உள்ளது. UN Geneva

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...
D._M._Swaminathan

ஈழத்தில் ஜாக்சன் துரை… [July 29, 2017]

தற்கால ஜாக்சன் துரை சுவாமிநாதனும் வீரபாண்டிய ஈழத் தமிழனும் சந்தித்தால் ...