Thursday, October 19th, 2017

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு! VIDEO

Published on June 7, 2017-4:10 pm   ·   No Comments

Europian Union with Vickyஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற 17 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று வருகைதந்திருந்தார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், தங்களுடைய உதவிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் பல கேள்விகளை எழுப்பினார்கள். 
நிர்வாகம் சம்பந்தமாக: அரசியல், பொருளாதார ரீதியாக : நிதி விடயமாக : சமூகம் தொடர்பாக நாங்கள் எவ்வளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை அவர்கள் அக்கறையுடன் செவிமடுத்துக் கொண்டார்கள். 
முழுமையாக எங்களுக்கு உரித்துக்கள் தரப்படாமல், அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்படாத நிலையிலே அல்லது புதிய அரசியல் யாப்பொன்று அறிமுகப்படுத்தப்படாத நிலையிலே நாங்கள் பழைய நிலைமையிலேயே தரித்து நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று விளக்கினோம்.
எங்களுடைய விளக்கங்களைப் புரிந்து கொண்டார்கள் என்று நம்புவதாகவும், தாங்கள் எங்களுடன் கலந்துரையாடிய விடயங்களை அரசின் உரிய தரப்புகளுக்கு விளக்குவதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார்.


Europian Union with Vicky

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...