Thursday, October 19th, 2017

தனியார் பஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணத்திற்கு மரக்குற்றிகள் கடத்தல்.

Published on June 7, 2017-4:25 pm   ·   No Comments

Busபுளியங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பல இலட்சம் மதிப்பு உள்ள மரக்குத்திகளை தனியார் பஸ் வண்டி மூலமாக கடத்திய நபர்கள் வாகனத்தை விட்டு தபபி ஓடியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (7) அதிகாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் வெலிபன்ன தலைமையிலான அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக வைத்து மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் தொடர்பாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது இயக்கச்சி பகுதியில் குறித்த வாகனம் இனங்காணப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரினால் பின்தொடரப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த சிற்றூர்தியில் இருந்த மரக்கடத்தல் காரர்கள் வாகனத்தை மிக விரைவாக செலுத்தி சென்றுள்ளனர்.

இதன் போது கொடிகாமம் பொலிஸ் எல்லைக்கு குறித்த சிற்றூர்தி சென்றதை அடுத்து கிளிநொச்சி பொலிஸார் கொடிகாமம் பொலிஸ் நிலைய உதவியை பெற்று இரு பொலிஸ் நிலையமும் இணைந்து எழுதுமட்டுவாள் பகுதியில் இருந்து தடைமுறியடிப்பு ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தடையையும் உடைத்து மீறி சென்ற குறித்த சிற்றூர்தி இறுதியாக கொடிகாமம் புத்தூர் சந்தியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டது. இதன் போது சிற்றூர்தியில் முதிரை மரக் குத்திகளை நூதனமாக கடத்திய மூவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

அடுத்து சிற்றூர்தியை மீட்ட பொலிஸார் அதிலிருந்து பல இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை மீட்டனர்.
இந்த மரக்கடத்தலில் தப்பி சென்ற இருவரையும் அடையாளம் கண்டுள்ள கொடிகாமம் பொலிஸார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.Busbus 1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...