Monday, June 26th, 2017

தமிழ் மக்களின் செய்திகளை சிங்கள ஊடகங்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றன- தீபாஞ்சலி அபயவர்த்தன VIDEO

Published on June 9, 2017-6:16 pm   ·   No Comments

thepanஇலங்கையில் தமிழ் பிரதேசங்களின் செய்திகளை சிங்கள ஊடகங்கள் வேறு ஒரு கோணத்தில் பார்க்கின்றன. உதாரணமாக இங்கு நடந்த எழுக தமிழ் பற்றி தமிழ் ஊடகங்களின் பார்வை ஒன்றாகவும் சிங்கள ஊடகங்களின் பார்வை வேறு ஒன்றாகவும் இருந்ததாக இலங்கை ஊடக கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் தீபாஞ்சலி அபயவர்த்தனா தெரிவித்தார்.

பொதுஜன ஊடக மறுசீரமைப்பு செயலகம், யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை, மற்றும் யாழ்ப்பாண ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பெரவை சட்ட வரைபு தொடர்பான பொதுக்கருத்தறியும் கலந்துரையாடல் யாழ். ரில்கோ ஹொட்டலில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய தீபாஞ்சலி அபயவர்த்தனா இதனை தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி கு.குருபரன் உரையாற்றுகையில் இணையத்தளங்களை பதிவு செய்யும் விடயம் தொடர்பாக இச்சட்ட மூலத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் இலங்கை தொடர்பான செய்திகளையே பிரசுரிக்கின்றன. அவை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினையை சிங்கள ஊடகங்கள் வெளிப்படுத்தவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஊடகங்கள் முதலாளிகளுக்கே சொந்தமானவையாகும். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் அனைத்தும் அந்த முதலாளியின் விருப்பு வெறுப்பையே பிரதிபலிக்கின்றன. சுதந்திரமாக செயற்படுவதில்லை என அவர் தெரிவித்தார். thepan

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...