Monday, June 26th, 2017

சுவிஸ் சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தேர்த்தோற்சவம் VIDEO

Published on June 10, 2017-8:20 pm   ·   No Comments

IMG_9957சுவிஸ். சென்.மாக்கிறேத்தன் அருள்மிக ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் 9ஆவது திருவிழாவான தேர்த்தோற்சவம் இன்று முற்பகல் நடைபெற்றது.

காலை ஆலய பிரதமகுரு வேதாகம ஞானஜோதி சிவஸ்ரீ பா.ஜோதிநாதக்குருக்கள் தலைமையிலான குருமார் வசந்தமண்டப பூசையை நடத்தினர். இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட சித்திர தேரில் சுவாமி ஆரோகணம் செய்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

ஆலய நிர்வாகத்தலைவர் வே.கணேசகுமார், செயலாளர் க.கருணாகரன், பொருளாளர் சதா அற்புதராசா ( குணம் ) தலைமையிலான நிர்வாகத்தினரும் தேர்த்திருவிழா உபயகாரர்களான செங்களான் நகர மக்களும் தேர்த்தோற்சவ உற்சவத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று 10ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் செய்யப்பட்ட புதிய சித்திரத்தேர் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வரப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெள்ளோட்டம் விடப்பட்டது.

இச்சித்திரத்தேரினை இலங்கையில் புகழ்பூத்த சிற்பாச்சாரியார் விஸ்வப்பிரமஸ்ரீ கலைமகுட மாமணி தியாகராசா பரமசாமி வடிவமைத்திருந்தார்.

இன்று நடைபெற்ற தேர்த்தோற்சவத்தில் சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, ஒஸ்ரியா ஆகிய நாடுகளிலிருந்து பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.


IMG_9957IMG_9926IMG_9936IMG_9938IMG_9946IMG_9959

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...